மனித சமூகத்தின் உயரிய பண்புகளான ஒற்றுமை, நன்றி உணர்வு மற்றும் சமாதானத்தை பிரதிபலிக்கும் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு, எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இன, மத வேறுபாடுகளின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு, அமைதி மற்றும் சுபீட்சத்தை உறுதி செய்வதே இலங்கைப் பொலிஸின் முதன்மை நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது
உழவர் திருநாளாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார பண்டிகையாகும். இயற்கையுடன் ஒன்றிணைந்த, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் இத்திருநாள், பயிர்களுக்கு வளம் சேர்த்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாளாகும்.
இந்து சமய மரபின்படி வாழும் தமிழ் மக்கள், தை மாதத்தின் பிறப்பை தங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாகக் கருதுகின்றனர். அந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த நாளே தைப்பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது.
விளைச்சலின் மூலம் கிடைக்கும் புத்தரிசியை பாலுடன் சேர்த்து பொங்க வைத்து, தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும், முழு உலகிற்கும் சுபீட்சமும் செழிப்பும் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
இன, மத வேறுபாடுகளின்றி இலங்கை மக்களனைவருக்கும் பாதுகாப்பு, அமைதி மற்றும் சுபீட்சத்தை உறுதி செய்வதே இலங்கைப் பொலிஸின் முதன்மை நோக்கமாகும்.
மனித சமூகத்தின் உயரிய பண்புகளான ஒற்றுமை, நன்றி உணர்வு மற்றும் சமாதானத்தை பிரதிபலிக்கும் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு, எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்த பொலிஸார் மனித சமூகத்தின் உயரிய பண்புகளான ஒற்றுமை, நன்றி உணர்வு மற்றும் சமாதானத்தை பிரதிபலிக்கும் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு, எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இன, மத வேறுபாடுகளின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு, அமைதி மற்றும் சுபீட்சத்தை உறுதி செய்வதே இலங்கைப் பொலிஸின் முதன்மை நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவதுஉழவர் திருநாளாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார பண்டிகையாகும். இயற்கையுடன் ஒன்றிணைந்த, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் இத்திருநாள், பயிர்களுக்கு வளம் சேர்த்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாளாகும்.இந்து சமய மரபின்படி வாழும் தமிழ் மக்கள், தை மாதத்தின் பிறப்பை தங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாகக் கருதுகின்றனர். அந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த நாளே தைப்பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது.விளைச்சலின் மூலம் கிடைக்கும் புத்தரிசியை பாலுடன் சேர்த்து பொங்க வைத்து, தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும், முழு உலகிற்கும் சுபீட்சமும் செழிப்பும் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.இன, மத வேறுபாடுகளின்றி இலங்கை மக்களனைவருக்கும் பாதுகாப்பு, அமைதி மற்றும் சுபீட்சத்தை உறுதி செய்வதே இலங்கைப் பொலிஸின் முதன்மை நோக்கமாகும்.மனித சமூகத்தின் உயரிய பண்புகளான ஒற்றுமை, நன்றி உணர்வு மற்றும் சமாதானத்தை பிரதிபலிக்கும் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு, எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.