கண்டி - பல்லேகல மற்றும் உடுதும்பர பொலிஸ் பிரிவுகளில் சந்தேகத்திற்கிடமான மற்றுமொரு ஜீப், டிபென்டர் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பள்ளே காட்டில் கண்டெடுக்கப்பட்ட டிபென்டர் வாகனம் ஜெயஸ்ரீ உயன பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அசெம்பிள் செய்யப்பட்ட டிபென்டர் கார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகிக்கப்படும் ஜீப்பின் உரிமையாளர் எனக் கூறப்படும் 49 வயதுடைய மின் பொறியியலாளர் ஒருவரே பொலிஸில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மற்றைய ஜீப் உதானம்பர உயன்வல பகுதியிலுள்ள வீடொன்றின் கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டின் உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது ஆறு மாதங்களுக்கு முன்னர் சம்பிரதாயமொன்றில் கலந்துகொள்வதற்காக வந்த நபரே ஜீப்பை நிறுத்தியதாகத் தெரிவித்தார்.
அந்த ஜீப் இலக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குருநாகல் ஆண்டகல பிரதேசத்தில் அதே இலக்கத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு ஜீப் இருப்பது தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான இரு வாகனங்கள் கண்டுபிடிப்பு - தீவிர விசாரணையில் பொலிஸார் கண்டி - பல்லேகல மற்றும் உடுதும்பர பொலிஸ் பிரிவுகளில் சந்தேகத்திற்கிடமான மற்றுமொரு ஜீப், டிபென்டர் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பள்ளே காட்டில் கண்டெடுக்கப்பட்ட டிபென்டர் வாகனம் ஜெயஸ்ரீ உயன பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அசெம்பிள் செய்யப்பட்ட டிபென்டர் கார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகிக்கப்படும் ஜீப்பின் உரிமையாளர் எனக் கூறப்படும் 49 வயதுடைய மின் பொறியியலாளர் ஒருவரே பொலிஸில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மற்றைய ஜீப் உதானம்பர உயன்வல பகுதியிலுள்ள வீடொன்றின் கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டின் உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது ஆறு மாதங்களுக்கு முன்னர் சம்பிரதாயமொன்றில் கலந்துகொள்வதற்காக வந்த நபரே ஜீப்பை நிறுத்தியதாகத் தெரிவித்தார்.அந்த ஜீப் இலக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குருநாகல் ஆண்டகல பிரதேசத்தில் அதே இலக்கத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு ஜீப் இருப்பது தெரியவந்துள்ளது.