• May 19 2024

பாம்பன் அருகே வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் - சிறப்பு வெடிகுண்டு சோதனை ஆரம்பம்! samugammedia

Tamil nila / May 3rd 2023, 11:09 pm
image

Advertisement

ராமேஸ்வரம் அருகே கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் வெடிகுண்டு புதைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்று(3) காலை  சென்னையில் இருந்து மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன்  வெடிகுண்டு தடுப்பு மற்றும் சோதனை சிறப்பு  பிரிவினர், உளவுத்துறையினர் மாவட்ட காவல் சிறப்பு படை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குழுவினர்கள்  ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம், அக்காள் மடம், தண்ணீர் ஊற்று உள்ளிட்ட  கடற்கரைப் பகுதிகள் மற்றும் மணல் பாங்கான இடங்கள் பனங்காடுகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர். 


இன்று (3)  காலை சுமார்  10 மணிக்கு  குறித்த   சோதனை  ஆரம்பமாகியுள்ளது.  இதுவரை வெடிகுண்டு அல்லது அதன் சார்ந்த எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த 2018 ஜூன் இறுதி வாரத்தில் தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரை ஓரத்தில் உள்ள தென்னந்தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த  வெடிகுண்டு புதையல்கள் (32 சாக்கு மூட்டைகள்) கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பின்  அவைகள் போலீசாரால்  அழிக்கப்பட்டது.


விசாரனையில்  விடுதலைப் புலிகள் தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், பிரப்பன் வலசை உள்ளிட்ட பகுதிகளில்  பயிற்சி மேற்கொண்டு வந்த  நிலையில் தமிழகத்தில் இருந்து அவர்கள் உடனடியாக  அப்புறப்படுத்த அரசு  ஆணையிட்டது.

இதனையடுத்து  அவர்கள் அவசர கதியில் புதைக்கப்பட்ட வெடிகுண்டுகள் என  கண்டுபிடிக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது .


அதே போல மேலும் ஏதேனும் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப் பட்டுள்ளதா? என்பது குறித்து, தகவல் உண்மையானதா என்பது குறித்து சிறப்பு பிரிவினர் தீவிரமாக சோதனை மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



பாம்பன் ஒட்டி உள்ள கடலோரப் பகுதிகளில்  இன்று (3) காலை முதல் திடீரென போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது மீனவ கிராமங்களில்  ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பாம்பன் அருகே வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் - சிறப்பு வெடிகுண்டு சோதனை ஆரம்பம் samugammedia ராமேஸ்வரம் அருகே கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் வெடிகுண்டு புதைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்று(3) காலை  சென்னையில் இருந்து மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன்  வெடிகுண்டு தடுப்பு மற்றும் சோதனை சிறப்பு  பிரிவினர், உளவுத்துறையினர் மாவட்ட காவல் சிறப்பு படை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குழுவினர்கள்  ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம், அக்காள் மடம், தண்ணீர் ஊற்று உள்ளிட்ட  கடற்கரைப் பகுதிகள் மற்றும் மணல் பாங்கான இடங்கள் பனங்காடுகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர். இன்று (3)  காலை சுமார்  10 மணிக்கு  குறித்த   சோதனை  ஆரம்பமாகியுள்ளது.  இதுவரை வெடிகுண்டு அல்லது அதன் சார்ந்த எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2018 ஜூன் இறுதி வாரத்தில் தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரை ஓரத்தில் உள்ள தென்னந்தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த  வெடிகுண்டு புதையல்கள் (32 சாக்கு மூட்டைகள்) கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பின்  அவைகள் போலீசாரால்  அழிக்கப்பட்டது.விசாரனையில்  விடுதலைப் புலிகள் தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், பிரப்பன் வலசை உள்ளிட்ட பகுதிகளில்  பயிற்சி மேற்கொண்டு வந்த  நிலையில் தமிழகத்தில் இருந்து அவர்கள் உடனடியாக  அப்புறப்படுத்த அரசு  ஆணையிட்டது.இதனையடுத்து  அவர்கள் அவசர கதியில் புதைக்கப்பட்ட வெடிகுண்டுகள் என  கண்டுபிடிக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது .அதே போல மேலும் ஏதேனும் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப் பட்டுள்ளதா என்பது குறித்து, தகவல் உண்மையானதா என்பது குறித்து சிறப்பு பிரிவினர் தீவிரமாக சோதனை மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.பாம்பன் ஒட்டி உள்ள கடலோரப் பகுதிகளில்  இன்று (3) காலை முதல் திடீரென போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது மீனவ கிராமங்களில்  ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement