• Mar 20 2025

தேசபந்துவின் வீடு சுற்றிவளைப்பு - சந்தேகத்திற்குரிய பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்

Chithra / Mar 19th 2025, 8:07 am
image

 

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் இல்லத்தை நேற்று மாலை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

ஹோகந்தரவில் உள்ள அவரது இல்லமே சோதனையிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னரும் இந்த இல்லம் சோதனையிடப்பட்டது.

வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட பல சந்தேகத்திற்குரிய பொருட்கள் குறித்து நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக காணாமல் போயுள்ள பொலிஸ் மா அதிபரை தேடும் பணிகளில் ஆறு சிறப்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

மேலும் தேசபந்து தென்னகோனுக்குச் சொந்தமான சொத்துக்களை பட்டியலிடுவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தேசபந்துவின் வீடு சுற்றிவளைப்பு - சந்தேகத்திற்குரிய பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்  பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் இல்லத்தை நேற்று மாலை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.ஹோகந்தரவில் உள்ள அவரது இல்லமே சோதனையிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னரும் இந்த இல்லம் சோதனையிடப்பட்டது.வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட பல சந்தேகத்திற்குரிய பொருட்கள் குறித்து நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கிடையில், கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக காணாமல் போயுள்ள பொலிஸ் மா அதிபரை தேடும் பணிகளில் ஆறு சிறப்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.மேலும் தேசபந்து தென்னகோனுக்குச் சொந்தமான சொத்துக்களை பட்டியலிடுவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement