போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1184 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 59 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அதேவேளை 23 சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் போதைப்பொருளுக்கு அடிமையான 49 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 93 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 337 கிராம் மற்றும் 758 மில்லி கிராம் ஹெரோயின், 242 கிராம் மற்றும் 372 மில்லிகிராம் ஐஸ், 06 கிலோ 629 கிராம் கஞ்சா, 7772 கஞ்சா செடிகள், 03 கிலோ 694 கிராம் கஞ்சா, 55 கிராம் ஹாஷிஸ், 1221 மெத் மாத்திரைகள் மற்றும் 21 கிலோகிராம் 6 கிலோ கிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸாரின் யுக்திய நடவடிக்கை.1184 சந்தேக நபர்கள் கைது.samugammedia போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1184 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்ட 59 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.அதேவேளை 23 சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அத்துடன் போதைப்பொருளுக்கு அடிமையான 49 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 93 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது 337 கிராம் மற்றும் 758 மில்லி கிராம் ஹெரோயின், 242 கிராம் மற்றும் 372 மில்லிகிராம் ஐஸ், 06 கிலோ 629 கிராம் கஞ்சா, 7772 கஞ்சா செடிகள், 03 கிலோ 694 கிராம் கஞ்சா, 55 கிராம் ஹாஷிஸ், 1221 மெத் மாத்திரைகள் மற்றும் 21 கிலோகிராம் 6 கிலோ கிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.