• Sep 20 2024

அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் - அரசியல் சதிக்குழுக்கள் - ரணிலுக்கு முட்டுக்கட்டை.! சாடும் உறுப்பினர்.!

Tamil nila / Feb 2nd 2023, 4:23 pm
image

Advertisement

ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிகளை பொறுக்க முடியாத சிலர் நாட்டை வேறு திசைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாக ஜக்கிய தேசிய கட்சியின் கௌருபிட்டிய தொகுதி அமைப்பாளர் ஜனித் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.


இன்று சிறிகொத்தாவில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.


நாட்டையும் மக்களையும் உண்மையாக நேசிப்பவர்கள் இவ்வாறு செயற்படமாட்டார்கள் என்றும் இது அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நல்லாட்சி காலத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்ற விடயங்களை நடைமுறைப்படுத்த முயற்சித்தார். 


எமது கட்சியினர் கட்சி என்ற ரீதியில் அரசாங்க உத்தியோகத்திலுள்ள மக்களைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தி வெற்றிடத்தை நிரப்பாமல் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே அப்போதைய மிகப்பெரிய நெருக்கடியாக இருந்தது. 


அதன் காரமாகவே நால்லாட்சியை இழந்தோம்  சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து உலக நாடுகளை ஒன்றிணைத்து இந்தப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஆரம்பம் முதலே ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.


குறிப்பாக ஜனவரி மாத செலவை விட வருமானம் குறைவு என்பதை அறிந்ததும் அரசின் செலவினத்தை மேலும் குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதி அறிவித்தார். 


அப்படித்தான் நாட்டை நேசிக்கும் ஒரு தலைவர் செயல்படவேண்டும். எனவே தேர்தலுக்காக மக்களுக்கு பொய்யான கதைகளை உருவாக்கி இந்த நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க அரசியல் குழுக்கள் முயற்சிக்கின்றன. 


அதனைப் புரிந்துகொண்டு இந்த நாட்டைப் பின்னோக்கி நகர்த்தாமல் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை 

இந்நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்த விரும்புவதாக ஜனித் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் - அரசியல் சதிக்குழுக்கள் - ரணிலுக்கு முட்டுக்கட்டை. சாடும் உறுப்பினர். ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிகளை பொறுக்க முடியாத சிலர் நாட்டை வேறு திசைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாக ஜக்கிய தேசிய கட்சியின் கௌருபிட்டிய தொகுதி அமைப்பாளர் ஜனித் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.இன்று சிறிகொத்தாவில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.நாட்டையும் மக்களையும் உண்மையாக நேசிப்பவர்கள் இவ்வாறு செயற்படமாட்டார்கள் என்றும் இது அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நல்லாட்சி காலத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்ற விடயங்களை நடைமுறைப்படுத்த முயற்சித்தார். எமது கட்சியினர் கட்சி என்ற ரீதியில் அரசாங்க உத்தியோகத்திலுள்ள மக்களைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தி வெற்றிடத்தை நிரப்பாமல் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே அப்போதைய மிகப்பெரிய நெருக்கடியாக இருந்தது. அதன் காரமாகவே நால்லாட்சியை இழந்தோம்  சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து உலக நாடுகளை ஒன்றிணைத்து இந்தப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஆரம்பம் முதலே ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.குறிப்பாக ஜனவரி மாத செலவை விட வருமானம் குறைவு என்பதை அறிந்ததும் அரசின் செலவினத்தை மேலும் குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதி அறிவித்தார். அப்படித்தான் நாட்டை நேசிக்கும் ஒரு தலைவர் செயல்படவேண்டும். எனவே தேர்தலுக்காக மக்களுக்கு பொய்யான கதைகளை உருவாக்கி இந்த நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க அரசியல் குழுக்கள் முயற்சிக்கின்றன. அதனைப் புரிந்துகொண்டு இந்த நாட்டைப் பின்னோக்கி நகர்த்தாமல் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்த விரும்புவதாக ஜனித் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement