மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அன்னாரின் பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில், இன்று காலை 9மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்னாரின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட பல பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதேவேளை நாளை மறுதினம் பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை இரா.சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் அவரது சொந்த ஊரான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தனின் பூதவுடலுக்கு மகிந்த, சஜித் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அன்னாரின் பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில், இன்று காலை 9மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அன்னாரின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட பல பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.இதேவேளை நாளை மறுதினம் பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை இரா.சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவரது சொந்த ஊரான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.