• Sep 19 2024

தேர்தலுக்கு அச்சமடையும் அரசியல் தலைவர்கள்- மைத்திரி குணரத்ன சாடல்!

Sharmi / Jan 9th 2023, 10:08 pm
image

Advertisement

மக்கள் விருப்பத்தை வெளிப்படுத்த மக்கள் ஆணைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் நாட்டுமக்களின் தீர்ப்பாக, தேர்தல் நடைபெற வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பிரதம செயலாளருமான மைத்திரி குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில்  இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.    

ஒவ்வொரு ஆணைக்குழுவையும் அழைத்து அவர்கள் மிரட்டுகின்றனர். அவ்வாறு செய்ய முற்பட்டால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கவில்லை. நாட்டில் மக்கள் ஆணை இன்மையாலேயே IMF  கடன் வழங்கவில்லை.அவர்கள் அதனை தர போவதில்லை. நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை IMFற்கு  தெரியும்.நாடாளுமன்றிலுள்ள 225 போரையும் ராஜபக்ஷக்களையும்  வீட்டிற்கு செல்லுமாறு கோருவதும்  IMFற்கு  தெரியும்.
அதனாலயே இன்னும் எமக்கு கடன் கிடைக்கவில்லை. நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள் என்பதனையும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கூறிக்கொள்கின்றோம்.

ஆகவே நாட்டு மக்களின் தீர்வாக தேர்தல் நடைபெற வேண்டும்.அதன் மூலமே மக்களை ஆணையை வெளிக்கொண்டு வர முடியும். அவ்வாறு இடம் பெற்றாலே ஐஆகு நிதியுதவி எமக்கு கிடைக்கும். நிதியுதவி கிடைக்க விட்டால் நிலைமை மோசமாகும் என்பது ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரியும்.

அதனை தெரிந்தும் தேர்தலுக்கு பயந்து ஒருவர் பின் ஒருவராக நிபந்தனைகள் போட்டு ஒவ்வருவருக்கும் அறிவுரை கூறி வருகின்றனர்இசட்ட மூலங்களை  கொண்டுவர முயற்சிக்கின்றார்கள். இதனை நங்கள் முற்று முழுதாக எதிர்க்கின்றோம் என தெரிவித்தார்.

தேர்தலுக்கு அச்சமடையும் அரசியல் தலைவர்கள்- மைத்திரி குணரத்ன சாடல் மக்கள் விருப்பத்தை வெளிப்படுத்த மக்கள் ஆணைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் நாட்டுமக்களின் தீர்ப்பாக, தேர்தல் நடைபெற வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பிரதம செயலாளருமான மைத்திரி குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.நேற்றைய தினம் கொழும்பில்  இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.    ஒவ்வொரு ஆணைக்குழுவையும் அழைத்து அவர்கள் மிரட்டுகின்றனர். அவ்வாறு செய்ய முற்பட்டால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கவில்லை. நாட்டில் மக்கள் ஆணை இன்மையாலேயே IMF  கடன் வழங்கவில்லை.அவர்கள் அதனை தர போவதில்லை. நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை IMFற்கு  தெரியும்.நாடாளுமன்றிலுள்ள 225 போரையும் ராஜபக்ஷக்களையும்  வீட்டிற்கு செல்லுமாறு கோருவதும்  IMFற்கு  தெரியும்.அதனாலயே இன்னும் எமக்கு கடன் கிடைக்கவில்லை. நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள் என்பதனையும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கூறிக்கொள்கின்றோம்.ஆகவே நாட்டு மக்களின் தீர்வாக தேர்தல் நடைபெற வேண்டும்.அதன் மூலமே மக்களை ஆணையை வெளிக்கொண்டு வர முடியும். அவ்வாறு இடம் பெற்றாலே ஐஆகு நிதியுதவி எமக்கு கிடைக்கும். நிதியுதவி கிடைக்க விட்டால் நிலைமை மோசமாகும் என்பது ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரியும்.அதனை தெரிந்தும் தேர்தலுக்கு பயந்து ஒருவர் பின் ஒருவராக நிபந்தனைகள் போட்டு ஒவ்வருவருக்கும் அறிவுரை கூறி வருகின்றனர்இசட்ட மூலங்களை  கொண்டுவர முயற்சிக்கின்றார்கள். இதனை நங்கள் முற்று முழுதாக எதிர்க்கின்றோம் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement