• Sep 19 2024

சீரியலில் பெரியாருக்கு பூஜை! சர்ச்சையில் சிக்கிய சன் டிவி!

crownson / Dec 24th 2022, 8:00 am
image

Advertisement

பொதுவாகவே டிவி சீரியல்கள் என்றாலே பிற்போக்குத்தனமாக இருப்பதாக ஒரு கருத்து உண்டு.

ஆனால் அதனை சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சன் டிவி சீரியல் ஒன்று தகர்த்தெறிந்திருக்கிறது.

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் இனியா என்ற தொடரிலிருந்து வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவில், பெண் ஒருவர் கோவிலுக்கு செல்லாததால் தனது கணவர் திட்டுவார் என பயந்து ஆட்டோவில் இருக்கும் பெரியார் படத்தின் முன் தேங்காய் உடைத்து அவரது படத்துக்கு ஊதுபத்தி காட்டுகிறார்.

பின் பெரியார் படத்தின் முன் பேசும் அந்தப் பெண், நான் உங்கள் புத்தகங்களைப் படித்ததில்லை.

படித்திருந்தால் கணவருக்கு அடிமையாக இருந்திருக்க மாட்டேன்.

நீங்கள் ஒரு ஆணாக இருந்துகொண்டு பெண் அடிமைத்தனத்தைப் பற்றி பேசுகிறீர்கள், என்று பெரியாரை பாராட்டி பேசுகிறார்.

பெண் விடுதலை பெற பெரியாரை படிக்கனும் என்று ஒரு தொலைக்காட்சி தொடரில் வருகிறது இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இனியா என்னும் தொடரில் இந்த முற்போக்கான சிந்தனை வந்துள்ளது!

இந்த வீடியோவைப் பகிர்பவர்கள், பெண்கள் அதிகம் பார்க்கும் டிவி சீரியலில் முற்போக்கு கருத்துகள் பேசுவது பாராட்டுக்குரியது என்று தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஜி.வி.பிரகாஷின் பேச்சுலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த கொற்றவை இந்த வீடியோவைப் பகிர்ந்து, சன் தொலைக்காட்சித் தொடரில் பெரியார்.

பெண் விடுதலை பெற பெரியாரைப் படிக்கணும் என்று ஒரு தொலைக்காட்சி தொடரில் வருகிறதென்றால் பாராட்டுக்குரியது,என்று புகழ்ந்துள்ளார்.

மேலும் இந்த நாடகத் தொடர் குறித்து பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

ஆனால் பெரியார் எதிர்ப்பாளர்கள் இதனை வன்மையாக கண்டித்தும் உள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியலில் பெரியாருக்கு பூஜை சர்ச்சையில் சிக்கிய சன் டிவி பொதுவாகவே டிவி சீரியல்கள் என்றாலே பிற்போக்குத்தனமாக இருப்பதாக ஒரு கருத்து உண்டு. ஆனால் அதனை சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சன் டிவி சீரியல் ஒன்று தகர்த்தெறிந்திருக்கிறது. சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் இனியா என்ற தொடரிலிருந்து வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.அந்த வீடியோவில், பெண் ஒருவர் கோவிலுக்கு செல்லாததால் தனது கணவர் திட்டுவார் என பயந்து ஆட்டோவில் இருக்கும் பெரியார் படத்தின் முன் தேங்காய் உடைத்து அவரது படத்துக்கு ஊதுபத்தி காட்டுகிறார். பின் பெரியார் படத்தின் முன் பேசும் அந்தப் பெண், நான் உங்கள் புத்தகங்களைப் படித்ததில்லை. படித்திருந்தால் கணவருக்கு அடிமையாக இருந்திருக்க மாட்டேன். நீங்கள் ஒரு ஆணாக இருந்துகொண்டு பெண் அடிமைத்தனத்தைப் பற்றி பேசுகிறீர்கள், என்று பெரியாரை பாராட்டி பேசுகிறார்.பெண் விடுதலை பெற பெரியாரை படிக்கனும் என்று ஒரு தொலைக்காட்சி தொடரில் வருகிறது இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இனியா என்னும் தொடரில் இந்த முற்போக்கான சிந்தனை வந்துள்ளது இந்த வீடியோவைப் பகிர்பவர்கள், பெண்கள் அதிகம் பார்க்கும் டிவி சீரியலில் முற்போக்கு கருத்துகள் பேசுவது பாராட்டுக்குரியது என்று தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஜி.வி.பிரகாஷின் பேச்சுலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த கொற்றவை இந்த வீடியோவைப் பகிர்ந்து, சன் தொலைக்காட்சித் தொடரில் பெரியார். பெண் விடுதலை பெற பெரியாரைப் படிக்கணும் என்று ஒரு தொலைக்காட்சி தொடரில் வருகிறதென்றால் பாராட்டுக்குரியது,என்று புகழ்ந்துள்ளார். மேலும் இந்த நாடகத் தொடர் குறித்து பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.  ஆனால் பெரியார் எதிர்ப்பாளர்கள் இதனை வன்மையாக கண்டித்தும் உள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement