• Sep 20 2024

ராஜினாமா ரகசியங்களை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் போப் பிரான்சிஸ்!

Tamil nila / Dec 18th 2022, 3:31 pm
image

Advertisement

பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே, தான் பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது


கத்தோலிக்க திருச்சபையின் 266ம் திருத்தந்தை போப்பாண்டவர் நேற்று தனது 86வது பிறந்தநாளைக கொண்டாடினார். ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்ற இயற்பெயரைக் கொண்ட போப்பாண்டவரின் பிறந்தநாளுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த நிலையில், அவர் தனது ராஜினாமா கடிதம் தொடர்பாக வெளியிட்ட தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


ஆனால், போப்பாண்டவரோ, திருச்சபைக்கு சங்கடங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவே தான் ராஜினாமா கடிதத்தைத் தந்ததாக தெரிவித்தார். இதன் பின்னணியையும் அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.



தனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அமலுக்கு வரும் வகையிலான, பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். வயதான தனக்குக், கடுமையான மற்றும் நிரந்தர உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், தனது கடமைகளைச் செய்ய முடியாமல் போனால், அந்தக் கடிதத்தைப் பயன்படுத்தும் வகையில் தான் பதவி விலகம் கடிதத்தைக் கொடுத்ததாக போப்பாண்டவர் தெரிவித்தார்.


2013-ம் ஆண்டு, கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தபோதும், ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.



ஸ்பானிய செய்தித்தாள் ஏபிசியிடம் பேசிய போப் பிரான்சிஸ், 86 வயதான தனக்கு முழங்கால் நோயைத் தவிர, வேறு எந்த உடல்நலக் குறைவும் இல்லை என்றும், ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார்.


"நான் ஏற்கனவே எனது ராஜினாமாவில் கையெழுத்திட்டுள்ளேன். டார்சிசியோ பெர்டோன் செயலாளராக இருந்த சமயத்தில் பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டேன், 'மருத்துவ காரணங்களுக்காக அல்லது ஏதேனும் எதிர்பாராத காரணங்கள் ஏற்பட்டால் எனது ராஜினாமா கடிதத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்," என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.



ஒரு விபத்து அல்லது உடல்நலப் பிரச்சினைகள் போப்பின் பணிக்கு இடையூறாக இருக்கும் சந்தர்ப்பங்களில், மாற்று ஏற்பாடு செய்யும் அதிகாரப்பூர்வ நெறிமுறையை நிறுவுவதற்கு போப் பிரான்சிஸ் நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறார்.


தனது உடல்நிலை பாதிக்கப்பட்டால், 1.3 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் அடிக்கடி கூறியிருக்கிறார். 


பதவியில் இருந்தபோது இறந்த போப் பால் VI (1963-1978) மற்றும் போப் பயஸ் XII (1939-1958) இருவரும் இதேபோன்ற ராஜினாமா கடிதங்களில் கையெழுத்திட்டதாக தான் நம்புவதாகவும் போப் பிரான்சிஸ் தெரிவித்தார். 

ராஜினாமா ரகசியங்களை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் போப் பிரான்சிஸ் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே, தான் பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதுகத்தோலிக்க திருச்சபையின் 266ம் திருத்தந்தை போப்பாண்டவர் நேற்று தனது 86வது பிறந்தநாளைக கொண்டாடினார். ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்ற இயற்பெயரைக் கொண்ட போப்பாண்டவரின் பிறந்தநாளுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த நிலையில், அவர் தனது ராஜினாமா கடிதம் தொடர்பாக வெளியிட்ட தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ஆனால், போப்பாண்டவரோ, திருச்சபைக்கு சங்கடங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவே தான் ராஜினாமா கடிதத்தைத் தந்ததாக தெரிவித்தார். இதன் பின்னணியையும் அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.தனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அமலுக்கு வரும் வகையிலான, பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். வயதான தனக்குக், கடுமையான மற்றும் நிரந்தர உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், தனது கடமைகளைச் செய்ய முடியாமல் போனால், அந்தக் கடிதத்தைப் பயன்படுத்தும் வகையில் தான் பதவி விலகம் கடிதத்தைக் கொடுத்ததாக போப்பாண்டவர் தெரிவித்தார்.2013-ம் ஆண்டு, கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தபோதும், ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.ஸ்பானிய செய்தித்தாள் ஏபிசியிடம் பேசிய போப் பிரான்சிஸ், 86 வயதான தனக்கு முழங்கால் நோயைத் தவிர, வேறு எந்த உடல்நலக் குறைவும் இல்லை என்றும், ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார்."நான் ஏற்கனவே எனது ராஜினாமாவில் கையெழுத்திட்டுள்ளேன். டார்சிசியோ பெர்டோன் செயலாளராக இருந்த சமயத்தில் பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டேன், 'மருத்துவ காரணங்களுக்காக அல்லது ஏதேனும் எதிர்பாராத காரணங்கள் ஏற்பட்டால் எனது ராஜினாமா கடிதத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்," என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.ஒரு விபத்து அல்லது உடல்நலப் பிரச்சினைகள் போப்பின் பணிக்கு இடையூறாக இருக்கும் சந்தர்ப்பங்களில், மாற்று ஏற்பாடு செய்யும் அதிகாரப்பூர்வ நெறிமுறையை நிறுவுவதற்கு போப் பிரான்சிஸ் நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறார்.தனது உடல்நிலை பாதிக்கப்பட்டால், 1.3 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் அடிக்கடி கூறியிருக்கிறார். பதவியில் இருந்தபோது இறந்த போப் பால் VI (1963-1978) மற்றும் போப் பயஸ் XII (1939-1958) இருவரும் இதேபோன்ற ராஜினாமா கடிதங்களில் கையெழுத்திட்டதாக தான் நம்புவதாகவும் போப் பிரான்சிஸ் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement