• May 11 2024

குறைந்த போசாக்குடைய உணவுகளை உண்ணும் 60 வீதமான இலங்கையர்கள்..!

Chithra / Dec 18th 2022, 3:38 pm
image

Advertisement

இலங்கையில் சுமார் 60 வீதமான மக்கள் குறைந்த போசாக்குடைய உணவுகளை உட்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடி காரணமாக அநேகமான குடும்பங்கள் குறைந்தளவு உணவை உட்கொள்வதுடன் போசாக்கு குறைந்த உணவுகளை உட்கொள்வதாக உலக உணவுத் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி அப்துல் ரஹீம் சித்திக் தெரிவித்துள்ளார்.


உணவு மற்றம் நீர் பாதுகாப்பற்ற நிலைமையே அரசாங்கம் எதிர்நோக்கி வரும் மிகப் பிரதான சவால் என சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மோசமான காலநிலை காரணமாக விவசாய செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 


காலநிலை மாற்றத்தினால் வழமையான பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் விளைச்சலின்மை போன்ற ஏதுக்களினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையில் உணவுப் பாதுகாப்பின்மை நிலை நீடிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறைந்த போசாக்குடைய உணவுகளை உண்ணும் 60 வீதமான இலங்கையர்கள். இலங்கையில் சுமார் 60 வீதமான மக்கள் குறைந்த போசாக்குடைய உணவுகளை உட்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.பொருளாதார நெருக்கடி காரணமாக அநேகமான குடும்பங்கள் குறைந்தளவு உணவை உட்கொள்வதுடன் போசாக்கு குறைந்த உணவுகளை உட்கொள்வதாக உலக உணவுத் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி அப்துல் ரஹீம் சித்திக் தெரிவித்துள்ளார்.உணவு மற்றம் நீர் பாதுகாப்பற்ற நிலைமையே அரசாங்கம் எதிர்நோக்கி வரும் மிகப் பிரதான சவால் என சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.மோசமான காலநிலை காரணமாக விவசாய செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். காலநிலை மாற்றத்தினால் வழமையான பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் விளைச்சலின்மை போன்ற ஏதுக்களினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையில் உணவுப் பாதுகாப்பின்மை நிலை நீடிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement