• Apr 08 2025

தயார் நிலையில் தபால் வாக்குச் சீட்டுகள்! தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

Chithra / Apr 7th 2025, 8:57 am
image


114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று (07) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

நீதிமன்ற நடைமுறைக்குப் பிறகு, ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்னாயக்க தெரிவித்தார். 

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகளைப் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் இருப்பதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார குறிப்பிட்டார். 

தொடர்புடைய தபால் சீட்டு விநியோக நடவடிக்கைகள் இன்று பிற்பகல் அல்லது நாளை (08) ஆரம்பமாகும் என அவர் தெரிவித்தார். 

இதற்கிடையில், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, குறித்த தபால் வாக்குச் சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அதிகாரி பிரதீப் புஷ்பகுமார தெரிவித்தார்.

தயார் நிலையில் தபால் வாக்குச் சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு 114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று (07) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்ற நடைமுறைக்குப் பிறகு, ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்னாயக்க தெரிவித்தார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகளைப் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் இருப்பதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார குறிப்பிட்டார். தொடர்புடைய தபால் சீட்டு விநியோக நடவடிக்கைகள் இன்று பிற்பகல் அல்லது நாளை (08) ஆரம்பமாகும் என அவர் தெரிவித்தார். இதற்கிடையில், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த தபால் வாக்குச் சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அதிகாரி பிரதீப் புஷ்பகுமார தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement