• Nov 28 2024

தபால் மூல வாக்களிப்பு குறித்து வௌியான அறிவிப்பு!

Tamil nila / Sep 28th 2024, 10:17 pm
image

பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், "தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து 7 முதல் 14 நாட்களுக்குள் தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 

அதன்படி, அனைத்து தபால் வாக்காளர்களும் இந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான உங்களின் தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை நிறுவனத் தலைவரால் சான்றளித்து, உங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த தேர்தல் 2024 வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டது. இதன்படி கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படவுள்ளது" என்றார்.

தபால் மூல வாக்களிப்பு குறித்து வௌியான அறிவிப்பு பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், "தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து 7 முதல் 14 நாட்களுக்குள் தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதன்படி, அனைத்து தபால் வாக்காளர்களும் இந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான உங்களின் தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை நிறுவனத் தலைவரால் சான்றளித்து, உங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.இந்த தேர்தல் 2024 வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டது. இதன்படி கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படவுள்ளது" என்றார்.

Advertisement

Advertisement

Advertisement