• Oct 30 2024

மின் கட்டண அதிகரிப்பு குறைந்த வருமானம் பெறுவோரை நெருக்கடிக்குள் தள்ளும்...! சபா குகதாஸ்...!samugammedia

Sharmi / Oct 21st 2023, 1:04 pm
image

Advertisement

மூன்றாவது தடவையாக மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையானது குறைந்த வருமானம் பெறுவோரை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடு என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2023 ஆண்டில் மூன்று தடவையாக மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மற்றும் சாதாரண வருமானம் பெறும் மக்களை பாரிய அளவில் பாதிக்கும்.

காரணம் மின் கட்டண உயர்வு வெறுமனே வீட்டுப் பாவனை மின்சார கட்டணத்துடன் முடிவதில்லை. மின்சாரத்தை வலுவாக கொண்டு இயங்கும் தொழில் நிலையங்கள் யாவும்
வாடிக்கையாளர்களின் கட்டண அறவீட்டை அதிகரிக்கும் நிலை உருவாகும்.

உதாரணமாக அரைக்கும் ஆலைகளில் கட்டணங்கள் உயர்வடையும் இதனால் சாதாரண வருமானம் பெறும் மக்கள் மேலும் வறுமை நிலைக்கு தள்ளப்படுவர்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைப்பதற்கு முன்பாக முதலாம் கட்டம் பல வரிகள் கட்டணங்கள் அதிகரித்தன .பின்னர் நாணய நிதியத்தின் முதல் கட்ட நிதி கிடைத்ததும் இரண்டாம் கட்ட கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. தற்போது இரண்டாம் கட்ட நிதி கிடைப்பதற்கு முன்பாக மூன்றாம் கட்ட வரிகள் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

எதிர்காலத்தில் எத்தனை தடவை கடன் பெறப்போகிறார்களோ அதற்கு மேலாக வரிகளும் கட்டணங்களும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன.

நாட்டின் வருமான மார்க்கங்கள் வீழ்ச்சியடைந்த நிலையில் தொடர்ச்சியான கடன் பெறுகையும் உள் நாட்டு கட்டண மற்றும் வரிகளின் அதிகரிப்புக்கள் ஒரு போதும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டெழ வழி திறக்கப் போவதில்லை அத்தோடு மக்களின் வருமானத்தில் முன்னேற்றங்கள் இல்லாமல் அவர்களின் வாழ்வாதார சுமைகளை அதிகரிப்பதால் நாட்டில் வறுமை நிலையே மேலும் தலை தூக்கும் எனவும் தெரிவித்தார்.

மின் கட்டண அதிகரிப்பு குறைந்த வருமானம் பெறுவோரை நெருக்கடிக்குள் தள்ளும். சபா குகதாஸ்.samugammedia மூன்றாவது தடவையாக மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையானது குறைந்த வருமானம் பெறுவோரை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடு என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,2023 ஆண்டில் மூன்று தடவையாக மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மற்றும் சாதாரண வருமானம் பெறும் மக்களை பாரிய அளவில் பாதிக்கும்.காரணம் மின் கட்டண உயர்வு வெறுமனே வீட்டுப் பாவனை மின்சார கட்டணத்துடன் முடிவதில்லை. மின்சாரத்தை வலுவாக கொண்டு இயங்கும் தொழில் நிலையங்கள் யாவும் வாடிக்கையாளர்களின் கட்டண அறவீட்டை அதிகரிக்கும் நிலை உருவாகும். உதாரணமாக அரைக்கும் ஆலைகளில் கட்டணங்கள் உயர்வடையும் இதனால் சாதாரண வருமானம் பெறும் மக்கள் மேலும் வறுமை நிலைக்கு தள்ளப்படுவர்.சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைப்பதற்கு முன்பாக முதலாம் கட்டம் பல வரிகள் கட்டணங்கள் அதிகரித்தன .பின்னர் நாணய நிதியத்தின் முதல் கட்ட நிதி கிடைத்ததும் இரண்டாம் கட்ட கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. தற்போது இரண்டாம் கட்ட நிதி கிடைப்பதற்கு முன்பாக மூன்றாம் கட்ட வரிகள் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.எதிர்காலத்தில் எத்தனை தடவை கடன் பெறப்போகிறார்களோ அதற்கு மேலாக வரிகளும் கட்டணங்களும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன.நாட்டின் வருமான மார்க்கங்கள் வீழ்ச்சியடைந்த நிலையில் தொடர்ச்சியான கடன் பெறுகையும் உள் நாட்டு கட்டண மற்றும் வரிகளின் அதிகரிப்புக்கள் ஒரு போதும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டெழ வழி திறக்கப் போவதில்லை அத்தோடு மக்களின் வருமானத்தில் முன்னேற்றங்கள் இல்லாமல் அவர்களின் வாழ்வாதார சுமைகளை அதிகரிப்பதால் நாட்டில் வறுமை நிலையே மேலும் தலை தூக்கும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement