• Sep 19 2024

இலங்கையில் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் கர்ப்பிணி பெண்கள்! மருத்துவர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

Chithra / Dec 8th 2022, 11:26 am
image

Advertisement


வீட்டில் கணவன்மாரின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான பெண்கள், தான் தாக்குதலுக்கு உள்ளானதை மருத்துவரிடம் கூறாது மறைப்பதாக கொழும்பு காசல் பெண்கள் வைத்தியசாலையின் மகபேறு மற்றும் நரம்பியல் தொடர்பான சிறப்பு மருத்துவர் லக்ஷ்மன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் ஹொட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் அவர் இதனை கூறியுள்ளார்.

இவ்வாறு வைத்தியசாலைக்கு வரும் பெண்களின் 50 வீதமானவர்கள் தம்மை கணவன் தாக்கியதை கூற விரும்புவதில்லை.


கணவனால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு வரும் பெண்களில் பலர் தாம் கீழே விழுந்து காயமடைந்து விட்டதாகவும் அல்லது வேறு பல காரணங்களையும் கூறுவதாகவும் லக்ஷ்மன் சேனாநாயக்க கூறியுள்ளார்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்களும் வீடுகளின் அதிளவில் சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இவ்வாறு சித்திரவதைகள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகும் கர்ப்பிணி பெண்களின் கரு கலைந்து விடுவதுடன் குறைந்த எடை கொண்ட பிள்ளைகள் பிறப்பது மற்றும் இரத்த போக்கு போன்றவற்றை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்படியான சித்திரவதைகளுக்கு உள்ளாகி மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் மூன்றில் ஒரு வீதமானோர் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். எனவும் மருத்துவர் லக்ஷ்மன் சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.  

இலங்கையில் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வீட்டில் கணவன்மாரின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான பெண்கள், தான் தாக்குதலுக்கு உள்ளானதை மருத்துவரிடம் கூறாது மறைப்பதாக கொழும்பு காசல் பெண்கள் வைத்தியசாலையின் மகபேறு மற்றும் நரம்பியல் தொடர்பான சிறப்பு மருத்துவர் லக்ஷ்மன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் ஹொட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் அவர் இதனை கூறியுள்ளார்.இவ்வாறு வைத்தியசாலைக்கு வரும் பெண்களின் 50 வீதமானவர்கள் தம்மை கணவன் தாக்கியதை கூற விரும்புவதில்லை.கணவனால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு வரும் பெண்களில் பலர் தாம் கீழே விழுந்து காயமடைந்து விட்டதாகவும் அல்லது வேறு பல காரணங்களையும் கூறுவதாகவும் லக்ஷ்மன் சேனாநாயக்க கூறியுள்ளார்.குறிப்பாக கர்ப்பிணி பெண்களும் வீடுகளின் அதிளவில் சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இவ்வாறு சித்திரவதைகள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகும் கர்ப்பிணி பெண்களின் கரு கலைந்து விடுவதுடன் குறைந்த எடை கொண்ட பிள்ளைகள் பிறப்பது மற்றும் இரத்த போக்கு போன்றவற்றை எதிர்நோக்கி வருகின்றனர்.இப்படியான சித்திரவதைகளுக்கு உள்ளாகி மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் மூன்றில் ஒரு வீதமானோர் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். எனவும் மருத்துவர் லக்ஷ்மன் சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement