• Jul 26 2026

'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டம் நடைமுறைப்படுத்த ஆயத்தம் – அதிகாரிகள் பங்கேற்ற முக்கிய கலந்துரையாடல்

Aathira / Jul 25th 2026, 1:05 pm
image

நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் "நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மாவட்ட மட்ட கலந்துரையாடல், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் தலைமையில் நேற்று (24) மாவட்ட செயலக உபக் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, 2026 ஜூலை 27 முதல் 31 ஆம் திகதி வரை "நேர்மை வாரம்" எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், அந்த வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், ஜூலை 28 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நேர்மைக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவணிக்கான ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, ஜூலை 27 நிறுவன நேர்மையை மேம்படுத்தும் நாளாகவும், ஜூலை 28 நிதி, டிஜிட்டல், தொழில்முயற்சியாண்மை மற்றும் தொழில்நுட்ப நேர்மைக்கான நாளாகவும், ஜூலை 29 ஆன்மீக, நெறிமுறை, கலாசார மற்றும் சமூக நேர்மையை வலுப்படுத்தும் நாளாகவும், 

ஜூலை 30 செயற்பாடு, உட்கட்டமைப்பு, சேவை வழங்கல் மற்றும் உழைப்பு நேர்மையை முன்னிறுத்தும் நாளாகவும், ஜூலை 31 சுற்றாடல், வள முகாமைத்துவம், கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மைக்கான நாளாகவும் அனுசரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி, மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டம் நடைமுறைப்படுத்த ஆயத்தம் – அதிகாரிகள் பங்கேற்ற முக்கிய கலந்துரையாடல் நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் "நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மாவட்ட மட்ட கலந்துரையாடல், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் தலைமையில் நேற்று (24) மாவட்ட செயலக உபக் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது, 2026 ஜூலை 27 முதல் 31 ஆம் திகதி வரை "நேர்மை வாரம்" எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், அந்த வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.அத்துடன், ஜூலை 28 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நேர்மைக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவணிக்கான ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, ஜூலை 27 நிறுவன நேர்மையை மேம்படுத்தும் நாளாகவும், ஜூலை 28 நிதி, டிஜிட்டல், தொழில்முயற்சியாண்மை மற்றும் தொழில்நுட்ப நேர்மைக்கான நாளாகவும், ஜூலை 29 ஆன்மீக, நெறிமுறை, கலாசார மற்றும் சமூக நேர்மையை வலுப்படுத்தும் நாளாகவும், ஜூலை 30 செயற்பாடு, உட்கட்டமைப்பு, சேவை வழங்கல் மற்றும் உழைப்பு நேர்மையை முன்னிறுத்தும் நாளாகவும், ஜூலை 31 சுற்றாடல், வள முகாமைத்துவம், கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மைக்கான நாளாகவும் அனுசரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி, மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement