• Nov 23 2024

செங்கடலை இரத்தக்கடலாக மாற்ற முயற்சி: ஜனாதிபதி குற்றச்சாட்டு..!!

Tamil nila / Jan 14th 2024, 12:09 pm
image

யேமனில் உள்ள ஹூதி போராளிகளின் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா வான்வழித் தாக்குதல் நடத்தியது குறித்து துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹூதி போராளிகள் தேவைக்கு அதிகமாக தாக்குதல் நடத்தியதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த நிலையில், ஹூதி போராளிகள் மீது தாக்குதல் நடத்தி செங்கடலை இரத்தக் கடலாக மாற்ற அமெரிக்காவும் பிரிட்டனும் முயற்சிப்பதாக துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தாக்குதலில் இருந்து ஹூதி போராளிகள் தம்மை தற்காத்துக் கொள்கின்றனர் எனவும் எர்டோகன் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் தாக்குதலுக்கு பதிலடி வழங்க போவதாக ஹூதி போராளிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக யேமனின் ஹூதி போராளிகள் செங்கடலில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது டோர்ன் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த தாக்குதல்களின் அதிகரிப்புடன், அமெரிக்க மற்றும் பிரித்தானிய விமானப்படையினர் யேமனில் உள்ள ஹூதி போராளிகளின் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி பல தளங்களை அழித்துள்ளனர்.

செங்கடலை இரத்தக்கடலாக மாற்ற முயற்சி: ஜனாதிபதி குற்றச்சாட்டு. யேமனில் உள்ள ஹூதி போராளிகளின் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா வான்வழித் தாக்குதல் நடத்தியது குறித்து துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹூதி போராளிகள் தேவைக்கு அதிகமாக தாக்குதல் நடத்தியதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் குற்றம் சுமத்தியுள்ளன.இந்த நிலையில், ஹூதி போராளிகள் மீது தாக்குதல் நடத்தி செங்கடலை இரத்தக் கடலாக மாற்ற அமெரிக்காவும் பிரிட்டனும் முயற்சிப்பதாக துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தாக்குதலில் இருந்து ஹூதி போராளிகள் தம்மை தற்காத்துக் கொள்கின்றனர் எனவும் எர்டோகன் கூறியுள்ளார்.அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் தாக்குதலுக்கு பதிலடி வழங்க போவதாக ஹூதி போராளிகள் தெரிவித்துள்ளனர்.இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக யேமனின் ஹூதி போராளிகள் செங்கடலில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது டோர்ன் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த தாக்குதல்களின் அதிகரிப்புடன், அமெரிக்க மற்றும் பிரித்தானிய விமானப்படையினர் யேமனில் உள்ள ஹூதி போராளிகளின் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி பல தளங்களை அழித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement