• May 06 2025

ஜனாதிபதி அநுர பலத்த பாதுகாப்புடன் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிப்பு

Chithra / May 6th 2025, 2:50 pm
image

 

வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் மீண்டும் நாடு திரும்பினார்.

இந்நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தில் பஞ்சிகாவத்தை - அபேசிங்க ராமய சைகோஜி முன்பள்ளியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்களித்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் 01.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,  கடந்த 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். 

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழு ஒன்றும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

 


ஜனாதிபதி அநுர பலத்த பாதுகாப்புடன் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிப்பு  வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் மீண்டும் நாடு திரும்பினார்.இந்நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தில் பஞ்சிகாவத்தை - அபேசிங்க ராமய சைகோஜி முன்பள்ளியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்களித்தார்ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் 01.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,  கடந்த 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழு ஒன்றும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement