• May 04 2024

செலவுகளை குறைக்குமாறு அமைச்சுகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Chithra / Jan 10th 2023, 11:37 am
image

Advertisement

செலவுகளை ஐந்து வீதத்தால் குறைக்குமாறு அனைத்து அமைச்சரவை அமைச்சுக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மதிப்பிடப்பட்ட ஒதுக்கீட்டில், ஐந்து வீதத்தினால் செலவினங்களைக் குறைக்குமாறு ஜனாதிபதி விக்ரமசிங்க அனைத்து அமைச்சுக்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக, அரச துறை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு கூட நிதியை பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி அனைத்து அமைச்சுக்களின் செலவுகளும் குறைந்தது ஐந்து வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

செலவுகளை குறைக்குமாறு அமைச்சுகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை செலவுகளை ஐந்து வீதத்தால் குறைக்குமாறு அனைத்து அமைச்சரவை அமைச்சுக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மதிப்பிடப்பட்ட ஒதுக்கீட்டில், ஐந்து வீதத்தினால் செலவினங்களைக் குறைக்குமாறு ஜனாதிபதி விக்ரமசிங்க அனைத்து அமைச்சுக்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த வருடத்தில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக, அரச துறை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு கூட நிதியை பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இதன்படி அனைத்து அமைச்சுக்களின் செலவுகளும் குறைந்தது ஐந்து வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement