1915 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி இலங்கை ஆளுநரால் அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் தவறான விசாரணையைத் தொடர்ந்து, 1915 ஜூலை 7 இல், தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானத்தை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (12) வெளியிடப்பட்டுள்ளது.
108 ஆண்டுகளுக்கு முன்னர், காலனித்துவ நீதிமன்றத்தால் தூக்கிலிடப்பட்ட எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு, மன்னிப்பு வழங்குவது தொடர்பில், 2023 இல் இலங்கை அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டது.
முன்னதாக, 1915இல், 27 வயதான பெட்ரிஸ், இலங்கையின் காலனித்துவ நிர்வாகத்தால் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, தேசத்துரோகக் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
கலவரங்களில் பங்கேற்று அரசுக்கு துரோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பல முறையீடுகள் இருந்தபோதிலும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், 1915 ஜூலை 7 அன்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது
108 ஆண்டுகளுக்கு முன் தூக்கிலிடப்பட்ட எட்வர்ட் ஹென்றிக்கு ஜனாதிபதி மன்னிப்பு 1915 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி இலங்கை ஆளுநரால் அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் தவறான விசாரணையைத் தொடர்ந்து, 1915 ஜூலை 7 இல், தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானத்தை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (12) வெளியிடப்பட்டுள்ளது.108 ஆண்டுகளுக்கு முன்னர், காலனித்துவ நீதிமன்றத்தால் தூக்கிலிடப்பட்ட எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு, மன்னிப்பு வழங்குவது தொடர்பில், 2023 இல் இலங்கை அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டது.முன்னதாக, 1915இல், 27 வயதான பெட்ரிஸ், இலங்கையின் காலனித்துவ நிர்வாகத்தால் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, தேசத்துரோகக் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார்.கலவரங்களில் பங்கேற்று அரசுக்கு துரோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.பல முறையீடுகள் இருந்தபோதிலும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.அத்துடன், 1915 ஜூலை 7 அன்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது