இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடிக்கடி இரகசிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முக்கிய அமைச்சர்கள் , நிமல் லான்சா, ஐ.தே.க.வின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன போன்றோர் மட்டும் இந்த கலந்துரையாடல்களில் கலந்து கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து சாகல ரத்நாயக்க தவிர்ந்த எந்தவொரு அரச அதிகாரியும் குறித்த கலந்துரையாடல்களில் கலந்து கொள்வதற்கு அழைக்கப்படுவதில்லை.
இந்நிலையில் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பொன்று மார்ச் மாத நடுப்பகுதிக்குள் வெளிவரலாம் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல்கள் தொடர்பில் ரகசிய ஆலோசனைகளில் ஈடுபடும் ஜனாதிபதி ரணில்.samugammedia இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடிக்கடி இரகசிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முக்கிய அமைச்சர்கள் , நிமல் லான்சா, ஐ.தே.க.வின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன போன்றோர் மட்டும் இந்த கலந்துரையாடல்களில் கலந்து கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.மேலும், ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து சாகல ரத்நாயக்க தவிர்ந்த எந்தவொரு அரச அதிகாரியும் குறித்த கலந்துரையாடல்களில் கலந்து கொள்வதற்கு அழைக்கப்படுவதில்லை.இந்நிலையில் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பொன்று மார்ச் மாத நடுப்பகுதிக்குள் வெளிவரலாம் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.