• Nov 14 2024

சமூக வலைத்தளங்களில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முயற்சிக்கும் ஜனாதிபதி ரணில்- இலங்கை நீதிக்கான மய்யம் குற்றச்சாட்டு..!

Sharmi / Aug 14th 2024, 11:27 am
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் அவர்களின் உத்தியோபூர்வ முகநூல் பக்கத்தில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக இலங்கை  நீதிக்கான மய்யம் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. 

குறித்த முறைப்பாட்டில் ஜனாதிபதி அவர்களின் உத்தியோபூர்வ முகநூல் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முகப்புத்தக இடுக்கைகளுக்கான (post )  View, Comment , Like  போன்றவற்றை செயற்கையான முறையில் அதிகரிக்க  போட்கள் (bots) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான View, Comment , Like  என்பன போலி முகநூல் கணக்குகளை  கொண்டு உருவாக்கப்படுகின்றன.

இச் செயற்பாடானது  வாக்காளர் மத்தியில் குறித்த ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிகமான ஆதரவு இருப்பதாக ஒரு தவறான புரிதலை ஏற்படுத்துவதால் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை  நீதிக்கான மய்யம் தேர்தல் ஆணையத்தை கோரி உள்ளது. 

செயற்கை நுண்ணறிவினை இவ்வாறு பயன்படுத்துவது பேஸ்புக் நிறுவனத்தின் சமூக தரநிலைகள் (Community Standards) மற்றும் இலங்கை ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் ஏற்பாடுகளை மீறுவதாகவும் அமைந்துள்ளதாக இலங்கை  நீதிக்கான மய்யம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இவ்வாறான செயற்பாடுகள் ஒரு சிறந்த நியாயமான தேர்தல் ஒன்றை இந் நாட்டு மக்கள் சந்திப்பதற்கும் தங்களுக்கு விரும்பிய வேட்பாளரை தேர்வு செய்வதற்கான உரிமையை மட்டுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என இலங்கை  நீதிக்கான மய்யம் குறித்த முறைப்பாட்டில்  கூறியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முயற்சிக்கும் ஜனாதிபதி ரணில்- இலங்கை நீதிக்கான மய்யம் குற்றச்சாட்டு. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் அவர்களின் உத்தியோபூர்வ முகநூல் பக்கத்தில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக இலங்கை  நீதிக்கான மய்யம் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. குறித்த முறைப்பாட்டில் ஜனாதிபதி அவர்களின் உத்தியோபூர்வ முகநூல் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முகப்புத்தக இடுக்கைகளுக்கான (post )  View, Comment , Like  போன்றவற்றை செயற்கையான முறையில் அதிகரிக்க  போட்கள் (bots) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இவ்வாறான View, Comment , Like  என்பன போலி முகநூல் கணக்குகளை  கொண்டு உருவாக்கப்படுகின்றன. இச் செயற்பாடானது  வாக்காளர் மத்தியில் குறித்த ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிகமான ஆதரவு இருப்பதாக ஒரு தவறான புரிதலை ஏற்படுத்துவதால் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை  நீதிக்கான மய்யம் தேர்தல் ஆணையத்தை கோரி உள்ளது. செயற்கை நுண்ணறிவினை இவ்வாறு பயன்படுத்துவது பேஸ்புக் நிறுவனத்தின் சமூக தரநிலைகள் (Community Standards) மற்றும் இலங்கை ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் ஏற்பாடுகளை மீறுவதாகவும் அமைந்துள்ளதாக இலங்கை  நீதிக்கான மய்யம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் ஒரு சிறந்த நியாயமான தேர்தல் ஒன்றை இந் நாட்டு மக்கள் சந்திப்பதற்கும் தங்களுக்கு விரும்பிய வேட்பாளரை தேர்வு செய்வதற்கான உரிமையை மட்டுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என இலங்கை  நீதிக்கான மய்யம் குறித்த முறைப்பாட்டில்  கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement