• May 05 2024

சர்வதேச நாணய நிதிய திட்டம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் அழைப்பு

Chithra / Mar 8th 2024, 8:15 am
image

Advertisement

 

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் நடந்து வரும் கலந்துரையாடலுக்கு ஏற்ப யோசனைகளை வழங்குமாறு கோருவதற்காக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தலைவர்களின் கூட்டமொன்றை கூட்டவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, கடன் முகாமைத்துவம் தொடர்பான விவாதங்களில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளை ஈடுபடுத்துமாறு நேற்று (07) நாடாளுமன்றில் பரிந்துரை செய்திருந்தார்.

இதனடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தலைவர்களையும் தாம் அழைக்க விரும்புவதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இதன்போதே நிலையான எதிர்காலத்தை நோக்கி பயணத்தை முன்கொண்டு செல்லமுடியும் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய திட்டம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் அழைப்பு  சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் நடந்து வரும் கலந்துரையாடலுக்கு ஏற்ப யோசனைகளை வழங்குமாறு கோருவதற்காக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தலைவர்களின் கூட்டமொன்றை கூட்டவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, கடன் முகாமைத்துவம் தொடர்பான விவாதங்களில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளை ஈடுபடுத்துமாறு நேற்று (07) நாடாளுமன்றில் பரிந்துரை செய்திருந்தார்.இதனடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தலைவர்களையும் தாம் அழைக்க விரும்புவதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.இதன்போதே நிலையான எதிர்காலத்தை நோக்கி பயணத்தை முன்கொண்டு செல்லமுடியும் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement