• Nov 23 2024

தமிழ் கட்சிகளை சந்திக்கும் ஜனாதிபதி...! கலந்துகொள்ளப் போவதில்லை...! விக்னேஸ்வரன் தீர்மானம்...!samugammedia

Sharmi / Dec 21st 2023, 12:13 pm
image

இன்றையதினம் தமிழ்க் கட்சிகளை ஜனாதிபதி சந்திக்கவுள்ள நிலையில் குறித்த சந்திப்பில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (21) வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்று அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்க மாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதனை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே எனது கருத்தாகும்.

ஆகவே, இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளப்போவதில்லை எனவும்  சி.வி விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகளை சந்திக்கும் ஜனாதிபதி. கலந்துகொள்ளப் போவதில்லை. விக்னேஸ்வரன் தீர்மானம்.samugammedia இன்றையதினம் தமிழ்க் கட்சிகளை ஜனாதிபதி சந்திக்கவுள்ள நிலையில் குறித்த சந்திப்பில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இன்று (21) வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்று அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்க மாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதனை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே எனது கருத்தாகும்.ஆகவே, இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளப்போவதில்லை எனவும்  சி.வி விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement