7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்கென அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு இன்று (10) விஜயம் செய்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தூதரகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை கொன்சல் ஜெனரல் கலாநிதி ரொஷ் ஜலக்கே மற்றும் திருமதி பிரியங்கா கமகே ஆகியோர் வரவேற்றனர்.
அதன் பின்னர், கொன்சல் ஜெனரல் மற்றும் ஊழியர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் அவர்கள் ஆற்றக்கூடிய செயலூக்கமான பங்களிப்பு குறித்தும் விரிவான கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் கொன்சல் ஜெனரல் கலாநிதி ரொஷ் ஜலக்கே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விசேட நினைவுப் பரிசையும் வழங்கி வைத்துள்ளதுடன் ஜனாதிபதி, துணைத் தூதரகம் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி. 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்கென அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு இன்று (10) விஜயம் செய்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தூதரகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை கொன்சல் ஜெனரல் கலாநிதி ரொஷ் ஜலக்கே மற்றும் திருமதி பிரியங்கா கமகே ஆகியோர் வரவேற்றனர்.அதன் பின்னர், கொன்சல் ஜெனரல் மற்றும் ஊழியர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் அவர்கள் ஆற்றக்கூடிய செயலூக்கமான பங்களிப்பு குறித்தும் விரிவான கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன் கொன்சல் ஜெனரல் கலாநிதி ரொஷ் ஜலக்கே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விசேட நினைவுப் பரிசையும் வழங்கி வைத்துள்ளதுடன் ஜனாதிபதி, துணைத் தூதரகம் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.