• Nov 28 2024

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சர்வஜன பலய கூட்டணி - ஆரம்பிக்கப்படவுள்ள பிரசார நடவடிக்கை

Chithra / Jun 27th 2024, 10:43 am
image

 

சர்வஜன பலய கூட்டணி, தனது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு முழுமையாக தயாராக இருப்பதாக மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர   தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட அலுவலக திறப்பு விழாவின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தொழிலதிபர் திலித் ஜயவீர, 

இடதுசாரி தேசியவாத சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மக்களின் முதன்மையான மாற்றாக ‘சர்வஜன பலய’ கூட்டணி உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

தமது கூட்டணி, இடதுசாரி தேசியவாதத்தை ஆதரிக்கும் ஒரே அரசியல் பிரிவாகும் என்று குறிப்பிட்ட அவர், மற்ற அனைத்துக் கட்சிகளும் வலதுசாரி தாராளமயக் கொடியின் கீழ் ஒன்றுபட்டுள்ளன என்று குறிப்பிட்டார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய அனைவரும் இந்த சித்தாந்தத்துடன் இணைந்துள்ளனர் என ஜயவீர சுட்டிக்காட்டினார்.

அவர்கள் அந்த பாதையில் பயணிக்கும் போது தமது கூட்டணி, தேசத்தின் மக்களுக்கு ஒரு தனித்துவமான மாற்றீட்டை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக, சர்வஜன பலய, உடனடியாக அரசியல் பிரசாரத்தை மேற்கொள்ள தயாராக உள்ளது என்றும் ஜயவீர தெரிவித்தார்.

எனினும் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை திலித் ஜயவீர வெளிப்படுத்தவில்லை.  

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சர்வஜன பலய கூட்டணி - ஆரம்பிக்கப்படவுள்ள பிரசார நடவடிக்கை  சர்வஜன பலய கூட்டணி, தனது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு முழுமையாக தயாராக இருப்பதாக மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர   தெரிவித்துள்ளார்.காலி மாவட்ட அலுவலக திறப்பு விழாவின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தொழிலதிபர் திலித் ஜயவீர, இடதுசாரி தேசியவாத சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மக்களின் முதன்மையான மாற்றாக ‘சர்வஜன பலய’ கூட்டணி உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.தமது கூட்டணி, இடதுசாரி தேசியவாதத்தை ஆதரிக்கும் ஒரே அரசியல் பிரிவாகும் என்று குறிப்பிட்ட அவர், மற்ற அனைத்துக் கட்சிகளும் வலதுசாரி தாராளமயக் கொடியின் கீழ் ஒன்றுபட்டுள்ளன என்று குறிப்பிட்டார்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய அனைவரும் இந்த சித்தாந்தத்துடன் இணைந்துள்ளனர் என ஜயவீர சுட்டிக்காட்டினார்.அவர்கள் அந்த பாதையில் பயணிக்கும் போது தமது கூட்டணி, தேசத்தின் மக்களுக்கு ஒரு தனித்துவமான மாற்றீட்டை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக, சர்வஜன பலய, உடனடியாக அரசியல் பிரசாரத்தை மேற்கொள்ள தயாராக உள்ளது என்றும் ஜயவீர தெரிவித்தார்.எனினும் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை திலித் ஜயவீர வெளிப்படுத்தவில்லை.  

Advertisement

Advertisement

Advertisement