ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நிச்சயமாக நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.ரத்நாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை நடத்தவேண்டியுள்ளதால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் எவ்வித தாக்கமும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்த வேண்டும் எனவும் ஆணைக்குழு கோரிய10 பில்லியன் ரூபா நிதி அமைச்சிடம் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதால் உரிய காலக்கெடுவிற்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்குள் நடைபெறும் எனவும், ஜுலை அல்லது ஒகஸ்ட் மாதத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நடைபெறும் - தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நிச்சயமாக நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.ரத்நாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலை நடத்தவேண்டியுள்ளதால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் எவ்வித தாக்கமும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்த வேண்டும் எனவும் ஆணைக்குழு கோரிய10 பில்லியன் ரூபா நிதி அமைச்சிடம் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதால் உரிய காலக்கெடுவிற்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும் ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்குள் நடைபெறும் எனவும், ஜுலை அல்லது ஒகஸ்ட் மாதத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.