• Sep 21 2024

ஜனாதிபதி பிறப்பித்துள்ள கட்டளை - பாதுகாப்பு பணிகளில் முப்படை! வெளியானது விசேட வர்த்தமானி samugammedia

Chithra / Apr 22nd 2023, 4:04 pm
image

Advertisement

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், அமைதியைப் பேணுவதற்காகவும் 25 நிர்வாக மாவட்டங்களிலும் முப்படையினரை பாதுகாப்பு பணிகளில் நிலைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 12ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தல் சனிக்கிழமை (22) முதல் அமுலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தரைப்படை, கடற்படை மற்றும் வான்படை என்பன கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, குருணாகல், புத்தளம் , அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி பிறப்பித்துள்ள கட்டளை - பாதுகாப்பு பணிகளில் முப்படை வெளியானது விசேட வர்த்தமானி samugammedia பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், அமைதியைப் பேணுவதற்காகவும் 25 நிர்வாக மாவட்டங்களிலும் முப்படையினரை பாதுகாப்பு பணிகளில் நிலைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 12ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தல் சனிக்கிழமை (22) முதல் அமுலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய தரைப்படை, கடற்படை மற்றும் வான்படை என்பன கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, குருணாகல், புத்தளம் , அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement