• Nov 24 2024

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் தமிழர்களின் நம்பிக்கையை வெற்றிகொள்வதாக அமைய வேண்டும் - விக்கி வலியுறுத்து

Chithra / Jan 3rd 2024, 2:02 pm
image

 


அரசியல் தீர்வு, நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்களில் அர்த்தப்புஷ்டியான நகர்வுகளை முன்னெடுத்து இலங்கை வாழ் தமிழர்களின் நம்பிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வென்றெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார். 

ஜனாதிபதியின் வாக்குறுதிகளும் வடக்குக்குக்கான உத்தேச விஜயமும் செயற்பாட்டளவில் அமையுமாயின் ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் குறிப்பிட்டார்.

நீண்ட காலமாக தீர்க்கப்படாமலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், 

தமிழ் தலைவர்கள் இணைந்து கூறினால் வேட்பாளராகக் களமிறங்குவது குறித்து பரசீலிப்பதாகவும் சி.வி.விக்கினேஷ்வரன் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை வியாழக்கிழமை (04)  வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வடக்கில் 3000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படாமலுள்ளது.

 60 000க்கும் மேற்பட்ட அரச காணிகள் படையினர் வசம் உள்ளன. அவற்றை மீளக்கையளிப்பதற்கு இதுவரைக் காலமும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 

கொழும்பிலுள்ளவர்களின் காணிகளை மீளக்கொடுத்து விட்டு அதனையும் காணி விடுவிப்பு எனத் தெரிவிக்கக் கூடும். 

எனவே பொதுவான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எதனையும் நம்பிவிட முடியாது என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் தமிழர்களின் நம்பிக்கையை வெற்றிகொள்வதாக அமைய வேண்டும் - விக்கி வலியுறுத்து  அரசியல் தீர்வு, நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்களில் அர்த்தப்புஷ்டியான நகர்வுகளை முன்னெடுத்து இலங்கை வாழ் தமிழர்களின் நம்பிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வென்றெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் வாக்குறுதிகளும் வடக்குக்குக்கான உத்தேச விஜயமும் செயற்பாட்டளவில் அமையுமாயின் ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் குறிப்பிட்டார்.நீண்ட காலமாக தீர்க்கப்படாமலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் தலைவர்கள் இணைந்து கூறினால் வேட்பாளராகக் களமிறங்குவது குறித்து பரசீலிப்பதாகவும் சி.வி.விக்கினேஷ்வரன் மேலும் குறிப்பிட்டார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை வியாழக்கிழமை (04)  வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் வடக்கில் 3000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படாமலுள்ளது. 60 000க்கும் மேற்பட்ட அரச காணிகள் படையினர் வசம் உள்ளன. அவற்றை மீளக்கையளிப்பதற்கு இதுவரைக் காலமும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கொழும்பிலுள்ளவர்களின் காணிகளை மீளக்கொடுத்து விட்டு அதனையும் காணி விடுவிப்பு எனத் தெரிவிக்கக் கூடும். எனவே பொதுவான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எதனையும் நம்பிவிட முடியாது என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement