• May 11 2024

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது: க.குணரட்ணம் தெரிவிப்பு!samugammedia

Tamil nila / Apr 7th 2023, 3:36 pm
image

Advertisement

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று முதல் பாணின் விலை  குறைக்கப்படுவதுடன், ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது எனவும் யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அதனை தெரிவித்தார்.

ஒரு இறாத்தல் பாணின் விலையினை பத்து ரூபாய் குறைத்து 160 ரூபாயாக விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் பாண் உற்பத்திக்கு தேவையான பொருட்களின் விலை குறைவடைந்தமையையடுத்து தமது சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

பாண்  உற்பத்திக்கு மா, டீசல் என்பன பின்னிப்பிணைந்தது. தற்பொழுது டீசலின் விலையும் கோதுமை மாவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது எனவும்  இதன் காரணமாக  பாணின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஏனைய பேக்கரி   உற்பத்தி பொருட்களின் விலையை நாங்கள் சடுதியாக குறைக்க முடியாது என்றும் க.குணரட்ணம் தெரிவித்தார்.


பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது: க.குணரட்ணம் தெரிவிப்புsamugammedia யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று முதல் பாணின் விலை  குறைக்கப்படுவதுடன், ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது எனவும் யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அதனை தெரிவித்தார்.ஒரு இறாத்தல் பாணின் விலையினை பத்து ரூபாய் குறைத்து 160 ரூபாயாக விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரட்ணம் தெரிவித்துள்ளார்.தற்பொழுது நாட்டில் பாண் உற்பத்திக்கு தேவையான பொருட்களின் விலை குறைவடைந்தமையையடுத்து தமது சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.பாண்  உற்பத்திக்கு மா, டீசல் என்பன பின்னிப்பிணைந்தது. தற்பொழுது டீசலின் விலையும் கோதுமை மாவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது எனவும்  இதன் காரணமாக  பாணின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஆனால், ஏனைய பேக்கரி   உற்பத்தி பொருட்களின் விலையை நாங்கள் சடுதியாக குறைக்க முடியாது என்றும் க.குணரட்ணம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement