• Oct 18 2025

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த பிரதமர் ஹரிணி!

shanuja / Oct 16th 2025, 3:09 pm
image

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய,  இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்துள்ளார். 


இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், இன்று காலை புதுடில்லியில் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். 


“இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம்,” என்று அவர் ‘X’ இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார். 


பிரதமர் ஹரிணி அமரசூரிய நாளைமறுதினம்  18 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார். அப்போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்துவார். 


நாளை நடைபெற உள்ள NDTV உலக உச்சி மாநாட்டில் “நிச்சயமற்ற காலங்களில் மாற்றத்தை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் முக்கிய உரையை நிகழ்த்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த பிரதமர் ஹரிணி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய,  இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், இன்று காலை புதுடில்லியில் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். “இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம்,” என்று அவர் ‘X’ இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய நாளைமறுதினம்  18 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார். அப்போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்துவார். நாளை நடைபெற உள்ள NDTV உலக உச்சி மாநாட்டில் “நிச்சயமற்ற காலங்களில் மாற்றத்தை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் முக்கிய உரையை நிகழ்த்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement