• Nov 25 2024

உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி 3 நாடுகளின் பிரதமர்கள் கூட்டறிக்கை..!!

Tamil nila / Feb 15th 2024, 10:20 pm
image

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கூட்டறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

ரஃபாவில் இஸ்ரேலின் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல், ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமையை கண்டிப்பதாகவும் குறித்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

இதனடிப்படையில், காசாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் அவசியமாகவுள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கான் யூனிஸ் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹமாஸ் பணயக் கைதிகளை அங்கு தடுத்து வைத்துள்ளமை தொடர்பில் நம்பகமான தகவல்கள் தங்களிடம் உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி 3 நாடுகளின் பிரதமர்கள் கூட்டறிக்கை. காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கூட்டறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.ரஃபாவில் இஸ்ரேலின் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இஸ்ரேல், ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமையை கண்டிப்பதாகவும் குறித்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன.இதனடிப்படையில், காசாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் அவசியமாகவுள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, கான் யூனிஸ் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.ஹமாஸ் பணயக் கைதிகளை அங்கு தடுத்து வைத்துள்ளமை தொடர்பில் நம்பகமான தகவல்கள் தங்களிடம் உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement