• Dec 04 2024

வரி அதிகரிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

Chithra / Jul 10th 2024, 9:37 am
image

 

அரச ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்கும் நோக்கில் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சம்பள அதிகரிப்பினை இலக்காகக்கொண்டு வற் வரி அதிகரிக்கப்பட்டால், தனியார்துறையினர் பாரியளவு தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையையும் மாணவர்களையும் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி நேர்மையுடன் செயற்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்கத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தனியார் துறைகளிடமிருந்து வரி அறவீடு செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் மறைகரமொன்று செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சில அரசியல்வாதிகளும், கடும்போக்குவாதிகளும் இந்த தொழிற்சங்க போராட்டங்களின் பின்னணியில் செயற்பட்டு வருவதாகத் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் காலத்தில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அர ஊழியர்கள் இரண்டு ஆண்டுகளாக முழுச் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டனர் எனவும், தனியார் துறையினருக்கு அவ்வாறு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனவும் கெமுனு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் போராட்டம் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்களின் வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

வரி அதிகரிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை  அரச ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்கும் நோக்கில் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.சம்பள அதிகரிப்பினை இலக்காகக்கொண்டு வற் வரி அதிகரிக்கப்பட்டால், தனியார்துறையினர் பாரியளவு தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.கல்வித்துறையையும் மாணவர்களையும் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி நேர்மையுடன் செயற்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்கத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தனியார் துறைகளிடமிருந்து வரி அறவீடு செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் மறைகரமொன்று செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.சில அரசியல்வாதிகளும், கடும்போக்குவாதிகளும் இந்த தொழிற்சங்க போராட்டங்களின் பின்னணியில் செயற்பட்டு வருவதாகத் குறிப்பிட்டுள்ளார்.கோவிட் காலத்தில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அர ஊழியர்கள் இரண்டு ஆண்டுகளாக முழுச் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டனர் எனவும், தனியார் துறையினருக்கு அவ்வாறு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனவும் கெமுனு சுட்டிக்காட்டியுள்ளார்.இந்தப் போராட்டம் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்களின் வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement