• May 09 2025

தமிழ்த்தேசியத்தின் பக்கம்நின்று தமிழ் அரசுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி - ரவிகரன் எம்.பி

Chithra / May 9th 2025, 4:26 pm
image


நடைபெற்றுமுடிந்த உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தலில் தமிழ்த்தேசியத்தின் பக்கம் நின்று, தமிழ் அரசுக்கட்சிக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச்செய்த அனைவருக்கும் தமது இதயபூர்வமான நன்றிகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 

நடைபெற்றுமுடிந்த உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார். 

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நடைபெற்றுமுடிந்த உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது. 

அந்தவகையில் தமிழ்த்தேசியத்தின்பால் நின்று தமிழ் அரசுக்கட்சிக்கு வாக்களித்து அமோக வெற்றியடைச்செய்த அனைத்து பாச உறவுகளுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான இடங்களை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கைப்பற்றும் என்ற வலுவான நம்பிக்கை எமக்கு இருந்தது. 

அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. எமது உறவுகள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு அதிகளவான வாக்குகளைச் செலுத்தி, அதிகளவான ஆசனங்களை கிடைக்கச்செய்துள்ளனர். 

அந்தவகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் என்ற வகையில் விசேடமாக முல்லைத்தீவு மக்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் - என்றார்.


தமிழ்த்தேசியத்தின் பக்கம்நின்று தமிழ் அரசுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி - ரவிகரன் எம்.பி நடைபெற்றுமுடிந்த உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தலில் தமிழ்த்தேசியத்தின் பக்கம் நின்று, தமிழ் அரசுக்கட்சிக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச்செய்த அனைவருக்கும் தமது இதயபூர்வமான நன்றிகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நடைபெற்றுமுடிந்த உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்றுமுடிந்த உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது. அந்தவகையில் தமிழ்த்தேசியத்தின்பால் நின்று தமிழ் அரசுக்கட்சிக்கு வாக்களித்து அமோக வெற்றியடைச்செய்த அனைத்து பாச உறவுகளுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான இடங்களை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கைப்பற்றும் என்ற வலுவான நம்பிக்கை எமக்கு இருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. எமது உறவுகள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு அதிகளவான வாக்குகளைச் செலுத்தி, அதிகளவான ஆசனங்களை கிடைக்கச்செய்துள்ளனர். அந்தவகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் என்ற வகையில் விசேடமாக முல்லைத்தீவு மக்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement