• Nov 26 2024

இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்ட தனியார் பேருந்து உாிமையாளர்கள்..! யாழில் பதற்றம் - குவிக்கப்பட்ட பொலிஸார்..!

Chithra / Feb 29th 2024, 10:09 am
image

யாழ்ப்பாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து உாிமையாளர்கள் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வடமாகாணத்தில் முறையான பேருந்து தாிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்டதுார தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

இதனால் தனியாா் போக்குவரத்து சேவைகள்  முடங்கியுள்ளது. 

இந்நிலையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் இ.போ.ச பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியாதளவு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகாியங்களை சந்தித்துள்ளனர். 

பொலிஸார் தலையிட்டு சில இ.போ.ச பேருந்துகளை முற்றுகையிலிருந்து விடுவிக்கும்போதும் சுமுகமான சேவை இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினநர் அங்கஜன் இராமநாதன் தனியாநர் பேருந்து உாிமையாளா்களின் கோாிக்கை தொடர்பாக பேசுவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலரை ஆளுநர் மற்றும் மாவட்ட செயலரை சந்திக்க அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.


இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்ட தனியார் பேருந்து உாிமையாளர்கள். யாழில் பதற்றம் - குவிக்கப்பட்ட பொலிஸார். யாழ்ப்பாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து உாிமையாளர்கள் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடமாகாணத்தில் முறையான பேருந்து தாிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்டதுார தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் தனியாா் போக்குவரத்து சேவைகள்  முடங்கியுள்ளது. இந்நிலையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.இந்நிலையில் இ.போ.ச பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியாதளவு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகாியங்களை சந்தித்துள்ளனர். பொலிஸார் தலையிட்டு சில இ.போ.ச பேருந்துகளை முற்றுகையிலிருந்து விடுவிக்கும்போதும் சுமுகமான சேவை இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினநர் அங்கஜன் இராமநாதன் தனியாநர் பேருந்து உாிமையாளா்களின் கோாிக்கை தொடர்பாக பேசுவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலரை ஆளுநர் மற்றும் மாவட்ட செயலரை சந்திக்க அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement