• Jan 13 2025

இசை நிகழ்ச்சிகளுக்காக மில்லியன் கணக்கில் செலவு - முன்னாள் அமைச்சர் ஹரினுக்கு எதிராக விசாரணை!

Chithra / Jan 6th 2025, 7:53 am
image

 

கடந்த அரசாங்க காலத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட ஸ்மார்ட் யூத் நைட் கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி தொடரில் நிதி மோசடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விடயம் தொடர்பில் பூரண விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இளைஞர் சேவைகள் பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் நோக்கங்களுக்காக, அப்போதைய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த திட்டத்தில், இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த நிகழ்ச்சிக்காக 323 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். 

பாதீட்டில் இளைஞர் விவகார அபிவிருத்திக்காக ஆயிரம் மில்லியன் ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், இந்த நிகழ்ச்சிக்காக மாத்திரம் அதிக தொகையை செலவிட்டுள்ளமை பாரிய மோசடி என அவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இந்த சம்பவம் குறித்து தம்மால் வெளிப்படுத்தப்பட்டதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதன்படி, கணக்காய்வு அறிக்கைகள் உள்ளிட்ட ஏனைய தரவுகளுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இசை நிகழ்ச்சிகளுக்காக மில்லியன் கணக்கில் செலவு - முன்னாள் அமைச்சர் ஹரினுக்கு எதிராக விசாரணை  கடந்த அரசாங்க காலத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட ஸ்மார்ட் யூத் நைட் கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி தொடரில் நிதி மோசடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் பூரண விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இளைஞர் சேவைகள் பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் நோக்கங்களுக்காக, அப்போதைய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த திட்டத்தில், இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்ச்சிக்காக 323 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். பாதீட்டில் இளைஞர் விவகார அபிவிருத்திக்காக ஆயிரம் மில்லியன் ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், இந்த நிகழ்ச்சிக்காக மாத்திரம் அதிக தொகையை செலவிட்டுள்ளமை பாரிய மோசடி என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இந்த சம்பவம் குறித்து தம்மால் வெளிப்படுத்தப்பட்டதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, கணக்காய்வு அறிக்கைகள் உள்ளிட்ட ஏனைய தரவுகளுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement