• Sep 21 2024

யாழ் போதனா வைத்தியசாலையில் விநியோகிக்கப்படும் குடிநீரில் சிக்கல்?SamugamMedia

Sharmi / Feb 17th 2023, 11:11 am
image

Advertisement

யாழ் .போதனா வைத்தியசாலையில் தங்கி நின்று சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு திடீரென வயிற்றோட்டம்,வாந்திபேதி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கிருமித் தொற்று ஏற்பட்டதே இதற்குக் காரணம் எனத் தெரியவருகிறது..

இந்நிலையில் குறித்த நோய்த்தாக்கம் ஏற்பட்டவர்களை வைத்தியசாலையின் பணிப்பாளருடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் தண்ணீரில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இவ்வாறான நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகங்கள் வலுப்பெற்ற நிலையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைத்தியசாலையின் குடிநீர்க் கிணறு மற்றும் நீர்த்தாங்கி என்பன சுத்தம் செய்யப்பட்டன.

சுத்தம் செய்யப்பட்ட பின்னர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் யாழ். அலுவலகத்தில்  வைத்தியசாலையின் தண்ணீர் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அந்த தண்ணீரில் கிருமித்தாக்கம் செறிந்து இருப்பது தெரியவந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் போதனா வைத்தியசாலையில் பயன்படுத்தும் குடிநீரின் ஒரு பகுதியானது யாழ்.மாநகர சபையினரால் யாழ். கோண்டாவில் பகுதியி்ல் இருந்து விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 

இதனைவிட யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள கிணற்றில் இருந்தும் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குடிநீரில் கிருமித்தொற்று ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு  சபையின் மாவட்ட பொறியியளாளர்  ஜெகதீஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்ட போது ,

வைத்தியசாலையி் இருந்து நீர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டமையை உறுதி செய்தார். அதன் முடிவுகள் இரகசியமானது அதனால் தன்னால் அவற்றை வெளிப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

இதன் போது அவரிடம் தகவல்களை கேட்ட ஊடகவியளாளர் குறித்த வைத்தியசாலையில் குடிநீரை ஒரு நாளைக்கு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்துகின்ற நிலையில் எவ்வாறு இரகசியமானது? எனக் கூற முடியும் எனக் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த பொறியியளாளர் சட்ட சிக்கல் ஏற்படலாம் என்ற காரணத்துக்காகவே கூறவில்லை என்றார்.


இரண்டாம் இணைப்பு

யாழ். போதனா வைத்தியசாலையின் குடிநீரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின்  குடிநீர் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ். அலுவலகத்தில் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது குறித்து தகவல் அறிவதற்கு ஊடகவியலாளர் ஒருவர் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ். அலுவலகத்தின் மாவட்ட பொறியியலாளரிடம் குறித்த  விடயம்  தொடர்பாக வினவினார்.

அதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு  சபையின் மாவட்ட பொறியியளாளர்,  இது இரகசியமான விடயம், ஆகையால் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறினால் மட்டுமே தகவல் கூறுவேன், ஊருக்கும் ஊடகத்திற்கும் பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை என கூறினார்.

குறித்த பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் பொறுப்பற்ற பதில் தொடர்பாக, குறித்த ஊடகவியலாளர் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவில் தொலைபேசி வாயிலாக முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையில் விநியோகிக்கப்படும் குடிநீரில் சிக்கல்SamugamMedia யாழ் .போதனா வைத்தியசாலையில் தங்கி நின்று சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு திடீரென வயிற்றோட்டம்,வாந்திபேதி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கிருமித் தொற்று ஏற்பட்டதே இதற்குக் காரணம் எனத் தெரியவருகிறது. இந்நிலையில் குறித்த நோய்த்தாக்கம் ஏற்பட்டவர்களை வைத்தியசாலையின் பணிப்பாளருடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.வைத்தியசாலையில் தண்ணீரில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இவ்வாறான நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகங்கள் வலுப்பெற்ற நிலையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைத்தியசாலையின் குடிநீர்க் கிணறு மற்றும் நீர்த்தாங்கி என்பன சுத்தம் செய்யப்பட்டன. சுத்தம் செய்யப்பட்ட பின்னர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் யாழ். அலுவலகத்தில்  வைத்தியசாலையின் தண்ணீர் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அந்த தண்ணீரில் கிருமித்தாக்கம் செறிந்து இருப்பது தெரியவந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ் போதனா வைத்தியசாலையில் பயன்படுத்தும் குடிநீரின் ஒரு பகுதியானது யாழ்.மாநகர சபையினரால் யாழ். கோண்டாவில் பகுதியி்ல் இருந்து விநியோகிக்கப்பட்டு வருகின்றது.  இதனைவிட யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள கிணற்றில் இருந்தும் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் குடிநீரில் கிருமித்தொற்று ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு  சபையின் மாவட்ட பொறியியளாளர்  ஜெகதீஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்ட போது , வைத்தியசாலையி் இருந்து நீர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டமையை உறுதி செய்தார். அதன் முடிவுகள் இரகசியமானது அதனால் தன்னால் அவற்றை வெளிப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.இதன் போது அவரிடம் தகவல்களை கேட்ட ஊடகவியளாளர் குறித்த வைத்தியசாலையில் குடிநீரை ஒரு நாளைக்கு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்துகின்ற நிலையில் எவ்வாறு இரகசியமானது எனக் கூற முடியும் எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த பொறியியளாளர் சட்ட சிக்கல் ஏற்படலாம் என்ற காரணத்துக்காகவே கூறவில்லை என்றார்.இரண்டாம் இணைப்புயாழ். போதனா வைத்தியசாலையின் குடிநீரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின்  குடிநீர் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ். அலுவலகத்தில் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.இது குறித்து தகவல் அறிவதற்கு ஊடகவியலாளர் ஒருவர் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ். அலுவலகத்தின் மாவட்ட பொறியியலாளரிடம் குறித்த  விடயம்  தொடர்பாக வினவினார்.அதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு  சபையின் மாவட்ட பொறியியளாளர்,  இது இரகசியமான விடயம், ஆகையால் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறினால் மட்டுமே தகவல் கூறுவேன், ஊருக்கும் ஊடகத்திற்கும் பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை என கூறினார்.குறித்த பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் பொறுப்பற்ற பதில் தொடர்பாக, குறித்த ஊடகவியலாளர் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவில் தொலைபேசி வாயிலாக முறைப்பாடு செய்துள்ளார்.இது குறித்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement