• Nov 19 2024

சாதாரண தர விஞ்ஞான வினாத்தாளிலும் சிக்கல்! பரீட்சையை கவனிக்க கூடுதல் அதிகாரிகள்!

Chithra / May 12th 2024, 5:29 pm
image

 

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மண்டபங்களை மேற்பார்வையிட மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பரீட்சை பாடங்கள் தொடர்பில் இதுவரையில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய சூழ்நிலைகள் காரணமாக மேலதிக கண்காணிப்பாளர்களை நியமிக்க பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும்,

 பரீட்சை சட்டத்தின் பிரகாரம் பரீட்சைகள் தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் எடுக்கும் உரிமை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு அமைவாக  அண்மையில் நடைபெற்ற விஞ்ஞானப் பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

விஞ்ஞானப் பாடம் தொடர்பான வினாத்தாளில் மூன்று பல்தேர்வு வினாக்கள் மற்றும் மூன்று கட்டுரை வினாக்கள் தொடர்பாக ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் வினவியதாகவும் மதுர விதானகே தெரிவித்தார்.

இதன்போது, பரீட்சை முடிந்து ஒரு மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் புள்ளிகள் வழங்கல் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வின் போது, ​​இது தொடர்பில் கலந்துரையாடி, 

மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மேலும் கூறினார்.

சாதாரண தர விஞ்ஞான வினாத்தாளிலும் சிக்கல் பரீட்சையை கவனிக்க கூடுதல் அதிகாரிகள்  கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மண்டபங்களை மேற்பார்வையிட மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.பரீட்சை பாடங்கள் தொடர்பில் இதுவரையில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய சூழ்நிலைகள் காரணமாக மேலதிக கண்காணிப்பாளர்களை நியமிக்க பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும், பரீட்சை சட்டத்தின் பிரகாரம் பரீட்சைகள் தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் எடுக்கும் உரிமை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு அமைவாக  அண்மையில் நடைபெற்ற விஞ்ஞானப் பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.விஞ்ஞானப் பாடம் தொடர்பான வினாத்தாளில் மூன்று பல்தேர்வு வினாக்கள் மற்றும் மூன்று கட்டுரை வினாக்கள் தொடர்பாக ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் வினவியதாகவும் மதுர விதானகே தெரிவித்தார்.இதன்போது, பரீட்சை முடிந்து ஒரு மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் புள்ளிகள் வழங்கல் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வின் போது, ​​இது தொடர்பில் கலந்துரையாடி, மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மேலும் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement