• Nov 27 2024

தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்கும் ஆயுதமாக பயங்கரவாத தடைச் சட்டம்...! கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Jan 13th 2024, 12:50 pm
image

நிகழ்நிலை காப்பு சட்டம்.பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகிய இரண்டையும் நீக்கி இலங்கையில் ஜனநாயகத்தினை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


கடந்த மாவீரர் நினைவேந்தல் தினத்தன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் மாஸ்டர் அவரது மகன் உட்பட 11பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே ஆறு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஐந்து பேர் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.


இன்றைய தினம் நான்கு பேரை சந்தித்து அவர்கள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் ஒருவர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.


சிறைச்சாலையில் சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்,


சர்வதேச அளவில் நினைவேந்தல் உரிமை மற்றும் ஒன்றுகூடும் உரிமைகளை அங்கீகரித்திருப்பதாக கூறிக்கொண்டு மக்களுக்கும் அவ்வாறான போலி நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு நினைவேந்தல்களில் ஈடுபட்டவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்து அதுவும் மிகவும் கொடூரமான சட்டத்தின் கீழ் கைது செய்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் தெரிவித்தார்.


அதேவேளை இந்த சூழலிலே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிஸ் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.



ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமைந்திருக்கின்ற அந்த நாட்டிற்கு செல்லும் போது இங்கே அடிப்படை உரிமைகளை மறுத்துக்கொண்டு உலக நாடுகளிலே ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றார்.


காசாவில் நடைபெறும் தாக்குதலை தொடர்ந்தும் நியாயப் படுத்த முடியாது என முதலைக் கண்ணீர் வடிக்கும் ஜனாதிபதி இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொடூரமான நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார் எனவும் கஜேந்திரன் எம்.பி தெரிவித்தார்.



இந்த சந்தர்ப்பத்திலே சர்வதேச சமூகம் ரணில் விக்கிரமசிங்க மீது பாரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.


அவர் ஒருபுறம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்றை புதிதாக கொண்டுவருவதற்கு முயல்வதுடன் அது கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்றில்  நிரல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல நிகழ்நிலை காப்பு சட்டம் என்ற ஒன்றை கொண்டுவருவதற்கும் நிரல்படுத்தப்பட்டுள்ளது.


குறித்த இரு சட்டங்களும் மிகவும் கொடூரமான சட்டங்கள்  எனவும் தெரிவித்தார்.


அதேவேளை இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முறைகேடாக பின்கதவால் பதவிக்கு வந்த பிற்பாடு பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் எதிர்காலத்தில் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கெதிராக மக்கள் தனது திருட்டுத் தனங்களையும் நேர்மையீனங்களையும்  சமூகவலைத்தளங்களினூடாக மக்கள் வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்காக நிகழ்நிலை காப்பு சட்டம் எனும் பெயரில் முழுமையாக கருத்து சுதந்திரத்தை நசுக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு இப்போது முற்படுகின்றார்.


எனவே, சர்வதேச சமூகம் ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்கின்ற அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் அவர் முன்வைத்தார்.



தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்கும் ஆயுதமாக பயங்கரவாத தடைச் சட்டம். கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு.samugammedia நிகழ்நிலை காப்பு சட்டம்.பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகிய இரண்டையும் நீக்கி இலங்கையில் ஜனநாயகத்தினை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த மாவீரர் நினைவேந்தல் தினத்தன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் மாஸ்டர் அவரது மகன் உட்பட 11பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே ஆறு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஐந்து பேர் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.இன்றைய தினம் நான்கு பேரை சந்தித்து அவர்கள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் ஒருவர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.சிறைச்சாலையில் சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்,சர்வதேச அளவில் நினைவேந்தல் உரிமை மற்றும் ஒன்றுகூடும் உரிமைகளை அங்கீகரித்திருப்பதாக கூறிக்கொண்டு மக்களுக்கும் அவ்வாறான போலி நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு நினைவேந்தல்களில் ஈடுபட்டவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்து அதுவும் மிகவும் கொடூரமான சட்டத்தின் கீழ் கைது செய்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் தெரிவித்தார்.அதேவேளை இந்த சூழலிலே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிஸ் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமைந்திருக்கின்ற அந்த நாட்டிற்கு செல்லும் போது இங்கே அடிப்படை உரிமைகளை மறுத்துக்கொண்டு உலக நாடுகளிலே ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றார்.காசாவில் நடைபெறும் தாக்குதலை தொடர்ந்தும் நியாயப் படுத்த முடியாது என முதலைக் கண்ணீர் வடிக்கும் ஜனாதிபதி இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொடூரமான நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார் எனவும் கஜேந்திரன் எம்.பி தெரிவித்தார்.இந்த சந்தர்ப்பத்திலே சர்வதேச சமூகம் ரணில் விக்கிரமசிங்க மீது பாரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.அவர் ஒருபுறம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்றை புதிதாக கொண்டுவருவதற்கு முயல்வதுடன் அது கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்றில்  நிரல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல நிகழ்நிலை காப்பு சட்டம் என்ற ஒன்றை கொண்டுவருவதற்கும் நிரல்படுத்தப்பட்டுள்ளது.குறித்த இரு சட்டங்களும் மிகவும் கொடூரமான சட்டங்கள்  எனவும் தெரிவித்தார்.அதேவேளை இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முறைகேடாக பின்கதவால் பதவிக்கு வந்த பிற்பாடு பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் எதிர்காலத்தில் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கெதிராக மக்கள் தனது திருட்டுத் தனங்களையும் நேர்மையீனங்களையும்  சமூகவலைத்தளங்களினூடாக மக்கள் வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்காக நிகழ்நிலை காப்பு சட்டம் எனும் பெயரில் முழுமையாக கருத்து சுதந்திரத்தை நசுக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு இப்போது முற்படுகின்றார்.எனவே, சர்வதேச சமூகம் ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்கின்ற அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் அவர் முன்வைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement