• Apr 27 2024

மின்சார சபையின் உத்தேச சீர்திருத்தங்கள் - உலக வங்கி அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்! samugammedia

Chithra / Sep 23rd 2023, 3:03 pm
image

Advertisement

 

இலங்கை மின்சார சபையின் உத்தேச சீர்திருத்தங்கள் தொடர்பில் மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கும் உலக வங்கி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு மின் மற்றும் வலுசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்றுதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், CEBயின் நிதி நிலைகள், பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் சட்டக் கட்டமைப்புகளை பகுப்பாய்வு செய்வதில் தொழில்நுட்ப உதவியுடன் உலக வங்கி முன்மொழியப்பட்ட CEB சீர்திருத்தங்களுக்கு உதவுவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான போட்டி மற்றும் எரிசக்தி செயல்திறனுக்கான தொழில்நுட்ப நிதி உதவி தொடர்பான தகவல் தொடர்பு தளத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும்  இதன்போது கலந்துரையாடியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மின்சார சபையின் உத்தேச சீர்திருத்தங்கள் - உலக வங்கி அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் samugammedia  இலங்கை மின்சார சபையின் உத்தேச சீர்திருத்தங்கள் தொடர்பில் மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கும் உலக வங்கி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சந்திப்பு மின் மற்றும் வலுசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்றுதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன், CEBயின் நிதி நிலைகள், பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் சட்டக் கட்டமைப்புகளை பகுப்பாய்வு செய்வதில் தொழில்நுட்ப உதவியுடன் உலக வங்கி முன்மொழியப்பட்ட CEB சீர்திருத்தங்களுக்கு உதவுவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான போட்டி மற்றும் எரிசக்தி செயல்திறனுக்கான தொழில்நுட்ப நிதி உதவி தொடர்பான தகவல் தொடர்பு தளத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும்  இதன்போது கலந்துரையாடியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement