• May 17 2024

மட்டக்களப்பில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் - கலந்து கொள்ளாதவர்களுக்கும் பொலிஸ் விசாரணை..! samugammedia

Chithra / Oct 28th 2023, 4:21 pm
image

Advertisement

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களையும் விசாரணை உட்படுத்தும் நடவடிக்கையில் மட்டக்களப்பு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றதாக தெரியவருகிறது. 

கடந்த எட்டாம் திகதி கால்நடை பண்ணையாளர்கள், காணாமல் போனோர் அமைப்பு, சிவில் சமூக அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு எதிரான எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை வீடியோ எடுத்த பொலிஸார் தற்போது அவர்களுக்கு எதிரான விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அறிய முடிகின்றது.

அந்த வகையில் குறித்த போராட்ட களத்தில் கலந்து கொள்ளாத மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஒருவரது வீட்டிலும் இன்று வாக்குமூலம் பெறுவதற்காக சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தான் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், கலந்து கொள்ளாத தான் எதற்காக வாக்குமூலம் எடுக்க வேண்டும் என குறித்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கௌரி பொலிஸாரை கேள்வி கேட்டு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் - கலந்து கொள்ளாதவர்களுக்கும் பொலிஸ் விசாரணை. samugammedia  மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களையும் விசாரணை உட்படுத்தும் நடவடிக்கையில் மட்டக்களப்பு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றதாக தெரியவருகிறது. கடந்த எட்டாம் திகதி கால்நடை பண்ணையாளர்கள், காணாமல் போனோர் அமைப்பு, சிவில் சமூக அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு எதிரான எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை வீடியோ எடுத்த பொலிஸார் தற்போது அவர்களுக்கு எதிரான விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அறிய முடிகின்றது.அந்த வகையில் குறித்த போராட்ட களத்தில் கலந்து கொள்ளாத மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஒருவரது வீட்டிலும் இன்று வாக்குமூலம் பெறுவதற்காக சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தான் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், கலந்து கொள்ளாத தான் எதற்காக வாக்குமூலம் எடுக்க வேண்டும் என குறித்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கௌரி பொலிஸாரை கேள்வி கேட்டு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement