• May 03 2024

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்..! samugammedia

Chithra / Oct 28th 2023, 4:22 pm
image

Advertisement


ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் அகேபோனோ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (28) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்தக் கப்பல், 150.5 மீற்றர் நீளமுடையதாகும்.

இக்கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் ஹிசாடோ சோடோகாவா மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோர் கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்தினர்.

இந்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும்போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (31) கப்பல் நாட்டிலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல். samugammedia ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் அகேபோனோ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (28) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்தக் கப்பல், 150.5 மீற்றர் நீளமுடையதாகும்.இக்கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் ஹிசாடோ சோடோகாவா மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோர் கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்தினர்.இந்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும்போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (31) கப்பல் நாட்டிலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement