• Sep 21 2024

குருந்தூர் மலை பகுதியில் அபகரிக்கப்படுள்ள தமிழ் மக்களின் நிலங்களை உடன் விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டம்! samugammedia

Tamil nila / Jun 21st 2023, 5:30 pm
image

Advertisement

குருந்தூர் மலை பகுதியில் அபகரிக்கப்படுள்ள தமிழ் மக்களின் நிலங்களை உடன் விடுவிக்குமாறு வலியுறுத்தி  இன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில  முல்லைத்தீவு குருந்தூர்மலைக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைக்கு இன்று புதன்கிழமை (21)  உதய கம்மன்பில விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.


இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வருகை தருவதற்கு முன்னதாக இன்று (21) காலை குருந்தூர்மலை அடிவாரத்தில் ஒன்றுகூடிய அபகரிப்புக்குள்ளான காணி உரிமையாளர்களான தண்ணிமுறிப்புக்குரிய மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.


அதன்படி, தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை  பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறும், திட்டமிட்ட சிங்கள மயமாக்கலை நிறுத்துமாறும்  வலியுறுத்தியே இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு, திட்டமிடப்பட்ட சிங்களமயமாக்கல் மற்றும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் இதன்போது கடுமையான எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.



இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.சத்தியசீலன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயற்பாட்டாளர் அ.பீற்றர் இளஞ்செழியன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், இவ்வாறு உதயன் கம்மன்பில குருந்தூர்மலைக்கு விஜம் மேற்கொண்ட  நிலையில், குருந்தூர்மலை அடிவாரம் மற்றும் குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் அதிகளவில்  பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


குருந்தூர் மலை பகுதியில் அபகரிக்கப்படுள்ள தமிழ் மக்களின் நிலங்களை உடன் விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் samugammedia குருந்தூர் மலை பகுதியில் அபகரிக்கப்படுள்ள தமிழ் மக்களின் நிலங்களை உடன் விடுவிக்குமாறு வலியுறுத்தி  இன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில  முல்லைத்தீவு குருந்தூர்மலைக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைக்கு இன்று புதன்கிழமை (21)  உதய கம்மன்பில விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வருகை தருவதற்கு முன்னதாக இன்று (21) காலை குருந்தூர்மலை அடிவாரத்தில் ஒன்றுகூடிய அபகரிப்புக்குள்ளான காணி உரிமையாளர்களான தண்ணிமுறிப்புக்குரிய மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.அதன்படி, தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை  பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறும், திட்டமிட்ட சிங்கள மயமாக்கலை நிறுத்துமாறும்  வலியுறுத்தியே இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.அத்தோடு, திட்டமிடப்பட்ட சிங்களமயமாக்கல் மற்றும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் இதன்போது கடுமையான எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.சத்தியசீலன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயற்பாட்டாளர் அ.பீற்றர் இளஞ்செழியன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.மேலும், இவ்வாறு உதயன் கம்மன்பில குருந்தூர்மலைக்கு விஜம் மேற்கொண்ட  நிலையில், குருந்தூர்மலை அடிவாரம் மற்றும் குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் அதிகளவில்  பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement