• Jul 28 2025

சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்!

shanuja / Jul 26th 2025, 8:35 pm
image

சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. 


வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில்  குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


இலங்கையின்  வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், நிலத்தை இழந்தவர்கள், அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் வலையமைப்புக்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் அமைப்புப் பிரதிநிதிகள், பெனிகள் அடங்கலாக பல்வேறு வகையில் இன அழிப்பிற்குள்ளாக்கப்பட்ட உள்ளாக்கப்பட்டு வருகின்ற பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டு வருகின்ற வடக்கு கிழக்கிலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு. திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய 08 மாவட்டங்களிலும் 26 யூலை 2025 ஆகிய இன்றைய தினம் நாம் ஒன்று கூடி கவனயீர்ப்பு போராட்டம் ஊடாக எமது ஏகோபித்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்.


உள்ளக நீதிப்பொறிமுறையென்பது என்றைக்கும் நியாமான திர்வினை ஸ்ரீலங்காவின் ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்போவதில்லை என்பதனால் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள், ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டுச் சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டுமே நீதியை வேண்டுகின்றோம்.


 

1.சத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பள்னாட்டு நீதிப் பொறிமுறை ஊடான விசாரணைகள் உடன் மேற்கொள்ளப்படல்வண்டும்


2 ஈழத் தமிழ் மக்களுக்கு இடப்பெற்ற இனப்படுகொலைகளுக்கான நீதிப் பொறிமுறை நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படாமல் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்.


3.தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் ஒரு பாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்கவேண்டும்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை சாவதேசம் கால இழுத்தடிப்பு செய்யாமல் உடன் சர்வதேச நீதிப் பொறிமுறையை மேற்கொள்ள வழி செய்ய வேண்டும்.


3.ஸ்ரீலங்காவில் தமிழ் இன அழிப்பு நடந்ததை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டும்


6. செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான மனிதப் புதை குழிகள் தொடர்பாக பளனாட்டு தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுப்ப வேண்டும்


7. தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சிள்ளங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மற்றும் நி ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்த வேண்டும். (இவை அரச அனுசரணையுடன் நடத்தப்படும் சிங்களமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.)


8. தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்.


9. பயங்கர வாத தடை சட்டம் மற்றும் நிகழ் நிலை சட்டம் (PTA & Online Safety Act) இரத்து செய்ய ஸ்ரீலங்கா அரசிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். 


உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பை முன்னெடுத்துள்ளனர். 


குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம் சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில்  குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின்  வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், நிலத்தை இழந்தவர்கள், அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் வலையமைப்புக்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் அமைப்புப் பிரதிநிதிகள், பெனிகள் அடங்கலாக பல்வேறு வகையில் இன அழிப்பிற்குள்ளாக்கப்பட்ட உள்ளாக்கப்பட்டு வருகின்ற பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டு வருகின்ற வடக்கு கிழக்கிலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு. திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய 08 மாவட்டங்களிலும் 26 யூலை 2025 ஆகிய இன்றைய தினம் நாம் ஒன்று கூடி கவனயீர்ப்பு போராட்டம் ஊடாக எமது ஏகோபித்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்.உள்ளக நீதிப்பொறிமுறையென்பது என்றைக்கும் நியாமான திர்வினை ஸ்ரீலங்காவின் ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்போவதில்லை என்பதனால் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள், ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டுச் சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டுமே நீதியை வேண்டுகின்றோம். 1.சத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பள்னாட்டு நீதிப் பொறிமுறை ஊடான விசாரணைகள் உடன் மேற்கொள்ளப்படல்வண்டும்2 ஈழத் தமிழ் மக்களுக்கு இடப்பெற்ற இனப்படுகொலைகளுக்கான நீதிப் பொறிமுறை நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படாமல் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்.3.தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் ஒரு பாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்கவேண்டும்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை சாவதேசம் கால இழுத்தடிப்பு செய்யாமல் உடன் சர்வதேச நீதிப் பொறிமுறையை மேற்கொள்ள வழி செய்ய வேண்டும்.3.ஸ்ரீலங்காவில் தமிழ் இன அழிப்பு நடந்ததை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டும்6. செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான மனிதப் புதை குழிகள் தொடர்பாக பளனாட்டு தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுப்ப வேண்டும்7. தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சிள்ளங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மற்றும் நி ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்த வேண்டும். (இவை அரச அனுசரணையுடன் நடத்தப்படும் சிங்களமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.)8. தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்.9. பயங்கர வாத தடை சட்டம் மற்றும் நிகழ் நிலை சட்டம் (PTA & Online Safety Act) இரத்து செய்ய ஸ்ரீலங்கா அரசிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement