• May 20 2024

வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்த பொது சுகாதார பரிசோதகர்கள்...!samugammedia

Sharmi / Oct 23rd 2023, 7:49 am
image

Advertisement

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று(23) அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு சாதகமான தீர்வுகள் வழங்கப்படாமை தொடர்பில் கவனத்தை ஈர்ப்பதே இந்த வேலை நிறுத்தத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.

களப் பணிகளுக்காக வழங்கப்படும் போக்குவரத்து, மேலதிக கொடுப்பனவை அதிகரிக்கத் தவறியமை முக்கிய பிரச்னைகளில் ஒன்று, இந்த கொடுப்பனவுகள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றுக்கு இணையாக இருக்கவில்லை, இதனால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நிதி சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

'தங்கள் குறைகளை வெளிப்படுத்த சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தேர்ந்தெடுத்துள்ளது.

எவ்வாறாயினும், துறைமுகம், விமான நிலையம், இரத்த வங்கி, மகப்பேறு மருத்துவமனைகள்,  போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதார நிறுவனங்கள் வேலைநிறுத்தம் காரணமாக பாதிக்கப்படாது எனவும் தெரிவித்தார்.

வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்த பொது சுகாதார பரிசோதகர்கள்.samugammedia பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று(23) அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.பொது சுகாதார பரிசோதகர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு சாதகமான தீர்வுகள் வழங்கப்படாமை தொடர்பில் கவனத்தை ஈர்ப்பதே இந்த வேலை நிறுத்தத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.களப் பணிகளுக்காக வழங்கப்படும் போக்குவரத்து, மேலதிக கொடுப்பனவை அதிகரிக்கத் தவறியமை முக்கிய பிரச்னைகளில் ஒன்று, இந்த கொடுப்பனவுகள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றுக்கு இணையாக இருக்கவில்லை, இதனால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நிதி சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.'தங்கள் குறைகளை வெளிப்படுத்த சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தேர்ந்தெடுத்துள்ளது. எவ்வாறாயினும், துறைமுகம், விமான நிலையம், இரத்த வங்கி, மகப்பேறு மருத்துவமனைகள்,  போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதார நிறுவனங்கள் வேலைநிறுத்தம் காரணமாக பாதிக்கப்படாது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement