• Nov 26 2024

வவுனியாவில் புகையிரத பாதுகாப்பு கடவையில் போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள்...! அதிகரிக்கும் விபத்துக்கள்...!samugammedia

Sharmi / Feb 14th 2024, 10:29 am
image

வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதனால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பாதையின் இரு பக்கங்களிலும் சீரற்ற முறையில் வாகனங்களை தரித்து வைத்தல் , புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருக்கும் சமயத்தில் வாகனத்தினை செலுத்துதல், புகையிரத கடவை திறந்தவுடன் எதிர்த்திசையில் வருகின்ற வாகனத்திற்கு வழி விடாது செல்லுதல் போன்ற செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக புகையிரத நிலைய வீதியில் தினசரி இரண்டிற்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன் சில சமயங்களில் மாத்திரமே பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



வவுனியாவில் புகையிரத பாதுகாப்பு கடவையில் போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள். அதிகரிக்கும் விபத்துக்கள்.samugammedia வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதனால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பாதையின் இரு பக்கங்களிலும் சீரற்ற முறையில் வாகனங்களை தரித்து வைத்தல் , புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருக்கும் சமயத்தில் வாகனத்தினை செலுத்துதல், புகையிரத கடவை திறந்தவுடன் எதிர்த்திசையில் வருகின்ற வாகனத்திற்கு வழி விடாது செல்லுதல் போன்ற செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக புகையிரத நிலைய வீதியில் தினசரி இரண்டிற்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன் சில சமயங்களில் மாத்திரமே பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.எனவே, இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement