• May 19 2024

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் இடம்பெறும் போராட்டத்துக்கு பொது அமைப்புக்கள் ஆதரவு ! samugammedia

Tamil nila / Aug 29th 2023, 11:03 pm
image

Advertisement

உலக லாவிய ரீதியில் இடம்பெறும்  சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் நாளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளால் அனுஸ்டிக்கப்படவிருக்கின்றது.

அந்த  வகையில் மேற்படி இரு மாகாணங்களிலும் இடம்பெறும் நீதி கோரிய ஜனநாயகப் போராட்டத்திற்கு  அகம் மனிதாபிமான  வள நிலையம் பூரண  ஒத்துழைப்பினை  வழங்குவதாக அறிவித்துள்ளது.

அவர்களின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக இலங்கையின் வடக்கு  கிழக்கு பிரதேசங்களில் திட்டமிட்ட வகையிவ் காணாமல் ஆக்கப்பட்ட  எமது உறவுகளுக்கு என்ன நடந்தது எங்க இருக்கிறார்கள் என்ற  உண்மையை இலங்கை அரசானது பொறுப்புக் கூறாத சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல ஆண்டு காலமாக வடக்கு கிழக்குப்  பிரதேசங்களிலும், இலங்கை தேசத்திலும் சர்வதேசப் பரப்பிலும் நீதி கோரிய போராட்டங்களையும்  பரிந்துரை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்ற சூழ்நிலையில் இன்றுவரைக்கும் எந்த விதமான  நீதிகளும் கிடைக்கப் பெறாதவர்களாக பல துன்பங்களுக்கு மத்தியிலும்  தங்களது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாளைய தினம்(30.08.2023) மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சர்வதேச ரீதியாக நீதி கோரிய போராட்டத்தில் எமது அகம் மனிதாபிமான  வள நிலையத்தின் சிவில் செயற்பாட்டுக்குழுவினர்களின் பூரணமான ஒத்துழைப்பும் ஆதரவும் இருக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அந்த வகையில் மேற்படி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு என்ன நடந்தது என்ற  உண்மை மற்றும் நீதி  கிடைக்கும் வரைக்கும் இம் மக்களுடன் நாம் தொடர்ந்து பயணிப்பதுடன், அவர்களின் நீதி கோரிய போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாளைய தினம் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலிருந்து  இணைய இருக்கின்றோம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன், இக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கும்  வரைக்கும்  வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் தொடர்ச்சியாக பயணிப்போம் என்பதனை இந்நாளில் பதிவிடுவதுடன், உறுதி கூறுகின்றோம்.என்றுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் இடம்பெறும் போராட்டத்துக்கு பொது அமைப்புக்கள் ஆதரவு samugammedia உலக லாவிய ரீதியில் இடம்பெறும்  சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் நாளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளால் அனுஸ்டிக்கப்படவிருக்கின்றது.அந்த  வகையில் மேற்படி இரு மாகாணங்களிலும் இடம்பெறும் நீதி கோரிய ஜனநாயகப் போராட்டத்திற்கு  அகம் மனிதாபிமான  வள நிலையம் பூரண  ஒத்துழைப்பினை  வழங்குவதாக அறிவித்துள்ளது.அவர்களின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,குறிப்பாக இலங்கையின் வடக்கு  கிழக்கு பிரதேசங்களில் திட்டமிட்ட வகையிவ் காணாமல் ஆக்கப்பட்ட  எமது உறவுகளுக்கு என்ன நடந்தது எங்க இருக்கிறார்கள் என்ற  உண்மையை இலங்கை அரசானது பொறுப்புக் கூறாத சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல ஆண்டு காலமாக வடக்கு கிழக்குப்  பிரதேசங்களிலும், இலங்கை தேசத்திலும் சர்வதேசப் பரப்பிலும் நீதி கோரிய போராட்டங்களையும்  பரிந்துரை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்ற சூழ்நிலையில் இன்றுவரைக்கும் எந்த விதமான  நீதிகளும் கிடைக்கப் பெறாதவர்களாக பல துன்பங்களுக்கு மத்தியிலும்  தங்களது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் நாளைய தினம்(30.08.2023) மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சர்வதேச ரீதியாக நீதி கோரிய போராட்டத்தில் எமது அகம் மனிதாபிமான  வள நிலையத்தின் சிவில் செயற்பாட்டுக்குழுவினர்களின் பூரணமான ஒத்துழைப்பும் ஆதரவும் இருக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.அந்த வகையில் மேற்படி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு என்ன நடந்தது என்ற  உண்மை மற்றும் நீதி  கிடைக்கும் வரைக்கும் இம் மக்களுடன் நாம் தொடர்ந்து பயணிப்பதுடன், அவர்களின் நீதி கோரிய போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாளைய தினம் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலிருந்து  இணைய இருக்கின்றோம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன், இக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கும்  வரைக்கும்  வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் தொடர்ச்சியாக பயணிப்போம் என்பதனை இந்நாளில் பதிவிடுவதுடன், உறுதி கூறுகின்றோம்.என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement