யாழில் உரிய அனுமதியின்றி உணவுகளை இறக்குமதி செய்து விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 12,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தாய்லாந்து நாட்டிலிருந்தே உணவு உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து, யாழில் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவரை எச்சரித்த மன்று, 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.
அனுமதியின்றி உணவு பொருள் விற்றவருக்கு தண்டம். யாழில் உரிய அனுமதியின்றி உணவுகளை இறக்குமதி செய்து விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 12,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் தாய்லாந்து நாட்டிலிருந்தே உணவு உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து, யாழில் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவரை எச்சரித்த மன்று, 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.