ஸ்ரீ லங்கன் விமான சேவை புதிதாக ஏ - 320 ரக விமானம் ஒன்றை மலேஷியாவிடம் இருந்து குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில் தற்போது ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான 22 விமானங்கள், சர்வதேச சேவைகளை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட இந்த விமானம் முதலாவது பயணமாக எதிர்வரும் 29 ஆம் திகதி மாலைத்தீவிற்கு பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தின் எரிபொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் நவீன தொழில்நுட்ப கருவி பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன், தற்போது கொழும்பில் இருந்து 21 நாடுகளைச் சேர்ந்த 26 நகரங்களுக்கு தமது சேவைகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மலேஷியாவிடமிருந்து குத்தகை அடிப்படையில் விமானம் கொள்வனவு.Samugammedia ஸ்ரீ லங்கன் விமான சேவை புதிதாக ஏ - 320 ரக விமானம் ஒன்றை மலேஷியாவிடம் இருந்து குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்துள்ளது.இதன் அடிப்படையில் தற்போது ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான 22 விமானங்கள், சர்வதேச சேவைகளை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆறு ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட இந்த விமானம் முதலாவது பயணமாக எதிர்வரும் 29 ஆம் திகதி மாலைத்தீவிற்கு பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விமானத்தின் எரிபொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் நவீன தொழில்நுட்ப கருவி பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன், தற்போது கொழும்பில் இருந்து 21 நாடுகளைச் சேர்ந்த 26 நகரங்களுக்கு தமது சேவைகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.