• Nov 11 2024

'வெளியே போடா' - சிறு நரிகளின் செயல்பாடுகளால் மானமிழக்கும் தமிழரசு- குணாளன் சுட்டிக்காட்டு..!

Sharmi / Aug 13th 2024, 7:45 pm
image

வவுனியாவில் நேற்றையதினம் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போது தகாத வார்த்தை பிரயோகங்களால் கௌரவமிக்க உறுப்பினர்கள் அவமதிக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழரசு கட்சியின் இளைஞரணியின்  யாழ் மாவட்ட செயலாளர் குணாளன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கும் கிழக்கும் இணைந்தது தான் தமிழர் தேசம்.  எமது அரசியல் பயணத்தில் உயர்ந்ததும் தாழ்ந்ததுமாய் எந்த ஒரு சிக்கல்களையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில்தான் எமது வெற்றியின் அடிநாதமே தங்கியிருக்கின்றது.

வடக்கு கிழக்கு என்ற இந்தப் பிரிவினையின் சூட்சுமத்தை பயன்படுத்திக் கொண்டுதான் தமிழ் தேசத்தின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதை மறந்து செயல்படுவோமானால் ஒரு காலத்திலும் ஒட்ட முடியாத இடைவெளியை இணைக்க முடியாத அந்தங்களை ஏற்படுத்தி விடும் அபாயம் நமது கண்முன்னே தெரிகின்றது .

நேற்று முன்தினம் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இதைத்தான் பறைசாற்றுகின்றது.

சங்கையில்லாத சிறு நரிகளின் ஒழுக்கம் இல்லாத நடத்தைகளால் நமக்கு அபாய மணி அடிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தமிழரசு கட்சியின் கௌரவ உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும் . 

இன்றளவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருவாரியான மக்களின்  பெருமதிப்பை பெற்றிருக்கின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ,  கல்வியலாளர் ஞா. ஸ்ரீநேசன் மீது பிரயோகிக்கப்பட்ட வெளியே போடா என்ற வார்த்தை பிரயோகம் அவ்வளவு இலகுவாக எடுத்துக்கொள்ளக் கூடிய ஒன்று அல்ல என்பதை தமிழரசு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும் 

நாம் வெளிப்படையாக பேசுவோம் . இவ்வாறான கீழ்த்தரமான குழப்பத்தை விளைவித்தவர்கள் இரண்டு பேர் ஒன்று முல்லைத்தீவைச் சேர்ந்த அன்ரனி ஜெகநாதன் பீற்றர்  மற்றவர்  சாவகச்சேரியைச் சேர்ந்த கேசவன்  சயந்தன் .  இவர்கள் இருவர் மீதும் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கட்சியின் தலைவரிடம்  நான் கோரிக்கை விடுத்திருந்தேன் அதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதி அளித்திருந்தார்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் கட்சி வேறு ஒரு அபாயகரமான தளத்தை நோக்கி நகரும் என்பதை கண்முன்னாலே காண நேரிடும்

இவர்கள் இருவர் மீதும் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்கக்கூடிய ஒரே ஒரு நபர்  நாடாளுமன்ற உறுப்பினர் ஆப்ரஹாம் மதியாபரணம்  சுமந்திரன் மட்டுமே.

ஏனெனில் இவர்கள் இருவரும் சுமந்திரன் குரல்கள் ! சுமந்திரன் கதைக்க முடியாதவற்றை இவர்கள் இருவரையும்  கொண்டுதான் கதைப்பார் .  சுமந்திரன் சாதிக்க முடியாதவற்றை இவர்கள் இருவரைக் கொண்டுதான் சாதித்துக் கொள்வார் என்பது பொதுவாக தெரிந்த விடயம். 

ஏற்கனவே கட்சிக்குள்ளும், பொதுவெளியிலும் பல குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள கேசவன் சயந்தன் என்பவர் உடனடியாக கட்சியின் இருந்து நீக்கப்பட வேண்டும். அதேபோன்று தமிழரசு கட்சிக்கெதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து துரோகமிழைத்த அன்ரனி ஜெகநாதன் பீற்றர்  மத்திய குழுவிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.  ஏனெனில் பீற்றரின் மத்திய குழு நியமனம் என்பது யாப்புக்கு முரணானது,

பீற்றரின் நெருங்கிய உறவினர் ஒருவர் கட்சியின் நிர்வாகப் பணிகளில் ஆதிக்கம் செலுத்திய காரணத்தினால் அவர் கட்சியில் 2018 ல்  உறுப்பினராகி ஒரு வருடத்திற்குள் அதாவது 2019 ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பொதுச்சபை கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினராக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால்  மத்திய குழுவுக்குள் ஒரு உறுப்பினர் உள்வாங்கப்பட வேண்டுமாக இருந்தால் தொடர்ச்சியாக அவர் இரண்டு வருடங்கள் அங்கத்துவத்தை வகித்திருக்க வேண்டும்.

ஆனால் அன்ரனி ஜெகநாதன் பீற்றர் என்பவர்  ஒரு வருடத்திற்குள் உள்வாங்கப்பட்டது கட்சியின் யாப்பு விதிகளை மீறியதாகும்.

எனவே உடனடியாக இந்த விடயத்தில் கட்சி கவனம் செலுத்தி அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். நாகரீகம் அற்ற இத்தகைய நபர்களால் கட்சி தன்மானம் இழக்கிறது என்பதை கட்சித் தலைமை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். 

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மத்திய குழு உறுப்பினர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட நாகரீகம் அற்ற வார்த்தைகளுக்காக வன்மையான கண்டனங்களை பதிவு செய்வதோடு அவர்களிடம் மன்னிப்பும் கோருகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



'வெளியே போடா' - சிறு நரிகளின் செயல்பாடுகளால் மானமிழக்கும் தமிழரசு- குணாளன் சுட்டிக்காட்டு. வவுனியாவில் நேற்றையதினம் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போது தகாத வார்த்தை பிரயோகங்களால் கௌரவமிக்க உறுப்பினர்கள் அவமதிக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழரசு கட்சியின் இளைஞரணியின்  யாழ் மாவட்ட செயலாளர் குணாளன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,வடக்கும் கிழக்கும் இணைந்தது தான் தமிழர் தேசம்.  எமது அரசியல் பயணத்தில் உயர்ந்ததும் தாழ்ந்ததுமாய் எந்த ஒரு சிக்கல்களையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில்தான் எமது வெற்றியின் அடிநாதமே தங்கியிருக்கின்றது.வடக்கு கிழக்கு என்ற இந்தப் பிரிவினையின் சூட்சுமத்தை பயன்படுத்திக் கொண்டுதான் தமிழ் தேசத்தின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை மறந்து செயல்படுவோமானால் ஒரு காலத்திலும் ஒட்ட முடியாத இடைவெளியை இணைக்க முடியாத அந்தங்களை ஏற்படுத்தி விடும் அபாயம் நமது கண்முன்னே தெரிகின்றது . நேற்று முன்தினம் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இதைத்தான் பறைசாற்றுகின்றது. சங்கையில்லாத சிறு நரிகளின் ஒழுக்கம் இல்லாத நடத்தைகளால் நமக்கு அபாய மணி அடிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தமிழரசு கட்சியின் கௌரவ உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும் . இன்றளவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருவாரியான மக்களின்  பெருமதிப்பை பெற்றிருக்கின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ,  கல்வியலாளர் ஞா. ஸ்ரீநேசன் மீது பிரயோகிக்கப்பட்ட வெளியே போடா என்ற வார்த்தை பிரயோகம் அவ்வளவு இலகுவாக எடுத்துக்கொள்ளக் கூடிய ஒன்று அல்ல என்பதை தமிழரசு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும் நாம் வெளிப்படையாக பேசுவோம் . இவ்வாறான கீழ்த்தரமான குழப்பத்தை விளைவித்தவர்கள் இரண்டு பேர் ஒன்று முல்லைத்தீவைச் சேர்ந்த அன்ரனி ஜெகநாதன் பீற்றர்  மற்றவர்  சாவகச்சேரியைச் சேர்ந்த கேசவன்  சயந்தன் .  இவர்கள் இருவர் மீதும் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கட்சியின் தலைவரிடம்  நான் கோரிக்கை விடுத்திருந்தேன் அதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதி அளித்திருந்தார். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் கட்சி வேறு ஒரு அபாயகரமான தளத்தை நோக்கி நகரும் என்பதை கண்முன்னாலே காண நேரிடும்இவர்கள் இருவர் மீதும் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்கக்கூடிய ஒரே ஒரு நபர்  நாடாளுமன்ற உறுப்பினர் ஆப்ரஹாம் மதியாபரணம்  சுமந்திரன் மட்டுமே. ஏனெனில் இவர்கள் இருவரும் சுமந்திரன் குரல்கள் சுமந்திரன் கதைக்க முடியாதவற்றை இவர்கள் இருவரையும்  கொண்டுதான் கதைப்பார் .  சுமந்திரன் சாதிக்க முடியாதவற்றை இவர்கள் இருவரைக் கொண்டுதான் சாதித்துக் கொள்வார் என்பது பொதுவாக தெரிந்த விடயம். ஏற்கனவே கட்சிக்குள்ளும், பொதுவெளியிலும் பல குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள கேசவன் சயந்தன் என்பவர் உடனடியாக கட்சியின் இருந்து நீக்கப்பட வேண்டும். அதேபோன்று தமிழரசு கட்சிக்கெதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து துரோகமிழைத்த அன்ரனி ஜெகநாதன் பீற்றர்  மத்திய குழுவிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.  ஏனெனில் பீற்றரின் மத்திய குழு நியமனம் என்பது யாப்புக்கு முரணானது,பீற்றரின் நெருங்கிய உறவினர் ஒருவர் கட்சியின் நிர்வாகப் பணிகளில் ஆதிக்கம் செலுத்திய காரணத்தினால் அவர் கட்சியில் 2018 ல்  உறுப்பினராகி ஒரு வருடத்திற்குள் அதாவது 2019 ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பொதுச்சபை கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினராக்கப்பட்டிருக்கிறார்.ஆனால்  மத்திய குழுவுக்குள் ஒரு உறுப்பினர் உள்வாங்கப்பட வேண்டுமாக இருந்தால் தொடர்ச்சியாக அவர் இரண்டு வருடங்கள் அங்கத்துவத்தை வகித்திருக்க வேண்டும். ஆனால் அன்ரனி ஜெகநாதன் பீற்றர் என்பவர்  ஒரு வருடத்திற்குள் உள்வாங்கப்பட்டது கட்சியின் யாப்பு விதிகளை மீறியதாகும். எனவே உடனடியாக இந்த விடயத்தில் கட்சி கவனம் செலுத்தி அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். நாகரீகம் அற்ற இத்தகைய நபர்களால் கட்சி தன்மானம் இழக்கிறது என்பதை கட்சித் தலைமை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மத்திய குழு உறுப்பினர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட நாகரீகம் அற்ற வார்த்தைகளுக்காக வன்மையான கண்டனங்களை பதிவு செய்வதோடு அவர்களிடம் மன்னிப்பும் கோருகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement